» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கிய செவ்வாடை பக்தர்கள்!

வெள்ளி 8, டிசம்பர் 2023 10:27:26 AM (IST)


சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரம்பூர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மேல்மருவத்தூர் செவ்வாடை பக்தர்கள் உணவுப் பொருட்களும் தண்ணீரும் வழங்கினர். 

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேல்மருவத்தூர் சித்தர்பீடம் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அவர்களின் அருளாசியுடன் பக்தர்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகி்னறனர். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரம்பூர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு செவ்வாடை பக்தர்கள் உணவுப் பொருட்களும் தண்ணீரும் வழங்கினர். இதுபோல் சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பல்வேறு பகுதிகளிலும் மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கத்தினர் உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி  தொண்டு செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory