» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தாதது ஏன்?: அமைச்சர் கேள்வி

செவ்வாய் 19, மார்ச் 2024 12:35:56 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தாதது ஏன்? என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். 

பிரதமர் மோடி நேற்று கோவையில் ரோட் ஷோ சென்றார். சாலையில் இருபுறமும் குவிந்து இருந்த பாஜக தொண்டர்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், மோடி தமிழகத்தில் பிரசாரம் செய்யும் வகையில் இந்த ரோட் ஷோ இருந்தது. ரோட் ஷோ சென்ற பிரதமர் மோடி, கடந்த 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மோடி அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பான புகைப்படங்களையும் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், மோடியின் இந்த பதிவை திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். "வழக்கம் போல மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை தேர்தல் ஆயுதமாக மோடி கையில் எடுத்துள்ளார். இது இந்த தேர்தலில் எடுபடாது" என்று அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்து விட்டது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்த முறை, திமுக, அதிமுக, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக தனது கூட்டணி கட்சிகளை சிதறவிடாமல் அப்படியே தக்க வைத்துக் கொண்டது. மறுபக்கம் அதிமுக, கூட்டணிக்காக பாமகவை நம்பி தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் ஒரே பெரிய கட்சி தேமுதிக மட்டுமே உள்ளது. தேமுதிகவும் தனது கூட்டணியை இன்னும் உறுதி செய்யவில்லை.

பாமகவை வளைத்து போட்ட பாஜக இந்த முறை வலுவான கூட்டணி அமைத்துள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, நெல்லை, தேனி உள்ளிட்ட தொகுதிகளை எப்படியாவது வெல்லும் முனைப்பில் பாஜக காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி தமிழகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கோவையில் பிரதமர் மோடியின் பிரமாண்ட வாகன பேரணி நடைபெற்றது.

இந்த வாகன பேரணியை தொடர்ந்து கடந்த 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மோடி அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பான புகைப்படங்களையும் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். மோடியின் இந்த பதிவை திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மனோ தங்கராஜ் கூறுகையில், இதே போல, குஜராத் கலவரத்தில் இறந்தவர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள், ஒக்கி புயலில் இறந்தவர்கள், மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்?

10 ஆண்டு பாஜக ஆட்சியில் 7.5 லட்சம் கோடி ஊழலும், 8 ஆயிரம் கோடி தேர்தல் பத்திர மோசடியையும் தவிர தாங்கள் சாதித்ததாக சொல்லிக்கொள்ள வேறெதுவும் இல்லை. அதனால் வழக்கம் போல மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை தேர்தல் ஆயுதமாக மோடி கையில் எடுத்துள்ளார். இது இந்த தேர்தலில் எடுபடாது.  இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory