» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி : பயணிகள் கடும் அவதி!

வெள்ளி 29, மார்ச் 2024 10:24:38 AM (IST)



தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில்  தண்டவாளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் ரயில்வே நிர்வாகம் கொண்டு செல்லவேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு , எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம்  கெளரவ செயலாளர் ஆ.சங்கர் அனுப்பியுள்ள புகார்; தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில்  தண்டவாளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை முன்னிட்டு  முதலாவது நடைமேடை முற்றிலுமாக தடுப்பு வேலிகள் அமைத்து இந்த பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக முதலாவது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வந்த முத்துநகர் விரைவு ரயில், மைசூர் விரைவு ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களுமே தற்போது இரண்டாவது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த பணிகள் நடைபெற்று வந்தாலும் இப்படி நடைமேடை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு எந்த வகையிலும் ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்புகள் ஏதும் தரப்படவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்அளிக்கிறது.

மேலும் இது தொடர்பாக சமூக ஊடகங்களில் கூட எந்த ஒரு செய்தியும் வரவில்லை.  பல பயணிகள் ரயில் நிலையத்துக்கு வந்த பிறகுதான் இப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறுவது அறிந்து வேக வேகமாக நடைமேடை மேம்பாலம் வழியாக முதலாவது நடைமேடையில் இருந்து இரண்டாவது நடைமேடைக்கு செல்கிறார்கள். ஆனால் சுமார் 8. 20 மணிக்கு ஒரு குடும்பத்தினர் ஓடி வந்து முதலாவது நடைமேடையில் ரயில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவசர அவசரமாக சுமைகளை தூக்கிக் கொண்டு  ஓடோடிச் சென்று ரயில் ஏறிய காட்சி மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியது. 

அடுத்ததாக 2 ஆண்கள் கையில் லக்கேஜியுடன் ஓடி வந்து பராமரிப்பு பணிகள் நடந்து வரும் முதலாம் நடை மேடையில் இறங்கி அங்குள்ள தண்ணீரில் விழுந்து தடுப்பு வேலியை தாண்டி ரயில் ஏறிச் சென்ற காட்சியும் நெஞ்சை பதற வைத்தது. இது குறித்து ரயில்வே நிர்வாகத்தில் விசாரித்த போது தூத்துக்குடி ரயில் நிலைய நிர்வாகம் சார்பில் செய்தி நாளிதழ்களுக்கும் காட்சி ஊடக நிறுவனங்களுக்கும் செய்தி குறிப்பு அனுப்பியதாகவும் ஆனால் அந்த செய்தியை எந்த ஒரு செய்தித்தாளும் ஊடகமும் வெளியிடவில்லை என்ற தகவலும் கிடைத்தது. 

இந்த முதலாம் நடைமேடை பராமரிப்பு பணிகள் முடிவடைய இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடி கீழூர் நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து விரைவு ரயில்களும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்திலும் நின்று பயணிகள் ஏற்றி செல்லும் வகையில் புறப்பாடு தற்காலிக நிறுத்த வசதியை  ஏற்படுத்தி தருமாறு ரயில்வே நிர்வாகத்திற்கு  கோரிக்கை விடுவிக்கிறோம்.


மக்கள் கருத்து

BalamuruganrMar 30, 2024 - 09:19:14 PM | Posted IP 172.7*****

Melure railway station No railway master No tickets counter No reservation No enquiries No water No lights No safty

முருகேசன்Mar 30, 2024 - 08:43:15 PM | Posted IP 172.7*****

மேலூர் இரயில் நிலையத்தில் எல்லா ரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்

PremMar 30, 2024 - 09:41:03 AM | Posted IP 172.7*****

thoothukudi people train needs negeleted by railways .only one night train last 148 years connected with chennai. no new trains for passengers ! thoothukudi giving lumpsum revenue for Maduari division( freight).BUT least priority given to passengar trains.

KailashMar 29, 2024 - 09:32:55 PM | Posted IP 162.1*****

Railway ministry can declare Port city station as only freight traffic station and order Our public to use Kovilpatti station for passenger traffic because our people don't ask for train facilities

ஹென்றிMar 29, 2024 - 02:19:32 PM | Posted IP 172.7*****

இவ்வளவு பணம் செலவு செய்து மேலூர் ரயில் நிலையம் எதற்கு கட்டினார்கள் என்றே தெரியவில்லை. அனைத்து ரயில்களும் இரு மார்க்கங்களிலும் நின்று செல்ல வேண்டும். புதிய பேருந்து நிலையம் அருகில் இருப்பதால் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். எனவே மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory