» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மிஸ் கூவாகம் அழகி போட்டியில் தூத்துக்குடி திருநங்கைகள் சாதனை!

புதன் 24, ஏப்ரல் 2024 5:04:58 PM (IST)



திருநங்கைகளுக்கான அழகி போட்டிகளில் தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கைகள் 2வது மற்றும் 3வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 

திருநங்கைகளின் இஷ்ட தெய்வமான கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு, தமிழக அரசின் சமூக நலத் துறை மற்றும் மை சொசைட்டி டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்தும் ‘மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டிகள் விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள ஆஞ்சநேய திருமண மண்டபம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில்  (ஏப்.22) திங்கள்கிழமை நடைபெற்றது. 

மிஸ் திருநங்கை அழகிப்போட்டியில் சென்னை, சேலம், ஈரோடு, மதுரை, கோவை, திருச்சி, விழுப்புரம், நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்தனர். தமிழ் கலாச்சாரம், நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் நடந்த இந்த சுற்றின் முடிவில் 7 பேர் 3-ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். 

இவர்களில் மிஸ் திருநங்கையாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக பொது அறிவுத்திறன் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, இதில் சிறந்த முறையில் பதில் கொடுத்த மூன்று நபர்களை தேர்வு செய்தனர். மூன்றாவது இடத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சுபப்ரியாவும், இரண்டாவது இடத்தை பாண்டிச்சேரியைச் சேர்ந்த வர்ஷாவும், முதல் இடத்தை சென்னையை சேர்ந்த சாம்ஷி தாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு மிஸ் திருநங்கை 2024க்கான விருது மற்றும் கிரீடம் அணிவிக்கப்பட்டது. 3வது இடம் பிடித்துள்ள சுப ப்ரியா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி கார் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். 

தூத்துக்குடி நேஹா 2வது இடம்



தென்னிந்திய திருநங்கை கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை நேகா என்பவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். அவருக்கு பரிசுத்தொகை ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory