» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து!
வியாழன் 8, ஆகஸ்ட் 2024 10:44:25 AM (IST)
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற தூத்துக்குடி மாணவி துர்கா ஸ்ரீதேவி அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் தங்கபதக்கம் வென்ற வீர வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி துர்கா ஸ்ரீதேவி மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை புரிந்தமைக்காண பாராட்டு சான்றிதழை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகிேயார் வழங்கினார்கள்.
இந்நிலையில் காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மீனாகுமாரி, டேக்வாண்டோ வீராங்கனை துர்கா ஸ்ரீதேவி, பயிற்சியாளர் ராமலிங்க பாரதி, மாவட்ட டேக்வாண்டோ சங்க உறுப்பினர்கள் அப்துல், வேணி, சந்திரகலா ஆகியோர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நோில் சந்தித்து சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் அனைவரையும் தமிழக அரசும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், ஊக்குவித்து வருகிறார்கள். இதை பயன்படுத்திக்கொண்டு அடுத்து இலக்கை நோக்கி பயனிக்க வேண்டும். சாதனைகள் பல புாிவதற்கு எப்போதும் துணையாக இருப்போம். என்று கூறினார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், கவுன்சிலர் சரவணக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.