» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 3104 மாணவர்களுக்கு டெபிட் கார்டு வழங்கல் - அமைச்சர் தகவல்!
வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 5:53:36 PM (IST)

குமரி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் முதற்கட்டமாக 3104 மாணவர்களுக்கு ரூ.1000க்கான டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அரசுப்பள்ளிகளில் 12ம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பு பயின்று வரும் மாணவர்கள் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வி கற்று, மேற்படிப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு, தமிழ்புதல்வன் திட்டத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி பேசுகையில்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பொதுமக்கள் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்கள். குறிப்பாக புதுமைப்பெண் திட்டம் 05.09.2022 அன்று துவங்கப்பட்டு, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000/- அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுநாள் வரை கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட சுமார் 3094 மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றார்கள். தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை தமிழ் வழிக்கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவியருக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
அதனைத்தொடர்ந்து அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசுப்பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் பெற்றோர்களின் மாணவர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்ப்புதல்வன் எனும் மாபெரும் திட்டத்தினை கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் இன்று துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப்புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில் மாதந்தோரும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்தின் மூலமாக இளைஞர்களில் ஆற்றலை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி நமது மாநில மாணவர்கள் நமது நாட்டின் எதிர்கால தூண்களாக நிற்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பிற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
நமது அரசு சமூக நீதிக்கான அரசு, பெண்கள் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றமடைய வேண்டுமென்ற நல்ல நோக்கோடு செயல்படும் அரசு. இளைஞர்களுடைய வேலைவாய்ப்பினை அதிகப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசு என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் மகளிருக்கு இலவச பயணத்திட்டம், காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண்திட்டம், எதிர்கால இளைஞர்களுக்கென தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், மக்களுடன் முதல்வர், மக்களைத்தேடி மருத்துவம், உங்கள் தேடி உங்கள் ஊரில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
இன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதற்கட்டமாக 134 கல்லுரியை சேர்ந்த 3104 மாணவர்களுக்கு ரூ.1000க்கான டெபிட் கார்டு மற்றும் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி மலர், தமிழ்பெருமிதம் கையேடு அடங்கிய வரவேற்பு பெட்டகம் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட சமூகநல அலுவலர் விஜய மீனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சேக் அப்துல் காதர், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வி.எஸ்.காளீஸ்வரி (நாகர்கோவில்), தமிழரசி (பத்மநாபபுரம்), மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப் 4 வினாத்தாள் கசிய வாய்ப்பு? தனியார் பஸ்களில் எடுத்து செல்லப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 11, ஜூலை 2025 5:18:09 PM (IST)

ஆளுநரின் அதிகாரங்களில் முதல்வர் தலையிடக் கூடாது : ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி!
வெள்ளி 11, ஜூலை 2025 4:33:19 PM (IST)

உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்
வெள்ளி 11, ஜூலை 2025 12:27:27 PM (IST)

புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி
வெள்ளி 11, ஜூலை 2025 12:17:16 PM (IST)

அங்கன்வாடிகள் மூடப்படும் என்பது தவறான தகவல்: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
வெள்ளி 11, ஜூலை 2025 11:59:39 AM (IST)

சூடுபிடிக்கும் தேர்தளம் களம்: 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
வெள்ளி 11, ஜூலை 2025 11:16:32 AM (IST)
