» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் போதைப்பொருள் வழக்கில் துணை நடிகை மீனா கைது!
சனி 9, நவம்பர் 2024 5:07:55 PM (IST)
சென்னையில் போதைப் பொருள் வைத்திருந்ததாக சின்னத்திரை நடிகை மீனா கைது செய்யப்பட்டார்.
சென்னையில், தொடர்ச்சியாக அதி நவீன விலை உயர்ந்த போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை ராயப்பேடை அருகே பொதைப்பொருள் விற்பனை செய்த நபர் ஒருவரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடன் சேர்ந்து பெண் ஒருவரும் இந்த விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை இன்று போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் மீனா என்பதும், அவர் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக இருந்து வருவதும், தொடர்ச்சியாக இப்பகுதியில் இதே போன்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, இவருக்கு பின்புலத்தில் உள்ளது யார், இவர் யாரிடம் இருந்து இந்த மெத்தபெட்டமைன் போதைப்பொருளை வாங்குகிறார் என்பது குறித்த தகவல் விரைவில் தெரிய வரும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை மீனா, டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் முழுமையாக அமல்: தமிழக அரசு
சனி 24, ஜனவரி 2026 5:49:07 PM (IST)

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மநீம செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
சனி 24, ஜனவரி 2026 4:41:51 PM (IST)

இந்தியை திணித்து தமிழை அழிக்க நினைத்தது காங்கிரஸ்: சீமான் குற்றச்சாட்டு
சனி 24, ஜனவரி 2026 3:59:25 PM (IST)

மழைநீர் வடிகால்வாயில் கொசுவலை போர்த்தியது ஏன்? - மேயர் பிரியா விளக்கம்
சனி 24, ஜனவரி 2026 3:32:33 PM (IST)

நாகராஜா கோவிலில் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சனி 24, ஜனவரி 2026 12:11:42 PM (IST)

சத்துணவு பணியாளர்களுக்கான புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சனி 24, ஜனவரி 2026 11:53:11 AM (IST)

