» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுரை - புனலூர் ரயிலை திருநள்ளாறு வரை நீட்டித்து நவகிரக எக்ஸ்பிரஸ் இயக்க கோரிக்கை!
செவ்வாய் 20, மே 2025 11:53:12 AM (IST)
மதுரை - புனலூர் ரயிலை திருநள்ளாறு வரை நீட்டிப்பு செய்து நவகிரக எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் தென்மாவட்ட பக்தர்கள் தரிசிக்க வசதியாக மதுரை புனலூர் ரயிலை திருநள்ளாறு வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.
மதுரையிலிருந்து நாகர்கோவில் வழியாக புனலூர்க்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் கோரோனா காலகட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மதுரை – புனலூர் ரயில் 139 கி.மீ கேரளாவிலும், 272 கி.மீ தமிழ்நாட்டில் என மொத்தம் 410 கி.மீ தூரம் மட்டுமே பயணிக்கின்றது. இவ்வாறு எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்பட்ட காரணத்தால் இந்த ரயிலின் பயண கட்டணம் அதிகரிப்பு காரணத்தால் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக வெகுவாக குறைந்துள்ளது.
இந்த ரயிலின் கால அட்டவணையில் மாற்றம் செய்து மதுரை -நாகர்கோவில் மார்க்கம் இருவழிப்பாதையாக மாற்றம் செய்த பிறகு இந்த தடத்தில் குறைந்த வேகம் கொண்ட ரயில் சுமார் 6:00 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன. அதே தூரத்தை வந்தே பாரத் ரயில் 2 மணி 45 நிமிடங்கள் சூப்பர் பாஸ்ட் ரயில்கள் 3 மணி 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது.
ஆகவே அனைத்து விதமான பயணிகளின் வசதிக்காக இந்த ரயிலின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி திருச்சி வழியாக திருநள்ளாறு அல்லது காரைக்கால் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இவ்வாறு திருநள்ளாறு அல்லது காரைக்கால் வரை நீட்டிப்பு செய்து இயக்கும் போது மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர் என செல்லும் அனைத்து பயணிகள் பயணம் செய்வார்கள் இதனால் ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
இந்த ரயிலை காரைக்கால் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் நீண்டகாலமாகவே கோரிக்கை விடுத்து வந்தது. தற்போது இந்த காரைக்கால் - பேரளம் இருப்பு பாதை பணிகள் முடிந்து விட்ட காரணத்தால் இந்த ரயிலை நாகப்பட்டினம், காரைக்கால் வழியாக திருநள்ளாறு வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
காரைக்கால் -திருநள்ளாறு - பேரளம் 23 கி.மீ தூரம் இருப்பு பாதை பணிகள் படுவேகமாக நடந்து முடிவுபெற்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அதிவேக சோதனை 20-05-2025 அன்று நடைபெற இருக்கிறது. அதன் பிறகு ரயில் இயக்கத்துக்கான தயார் நிலை குறித்து ரயில்வே அமைச்சகத்துக்கு தெரிவிப்பார். பின்னர் ரயில் போக்குவரத்து தொடங்கும் தேதி அறிவிப்பு வெளியாகும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1898 -ல் தொடங்கப்பட்ட ரயில் போக்குவரத்து
காரைக்கால் -பேரளம் இடையே அப்போதைய பிரிட்டிஷ் நிர்வாகம், பிரெஞ்சு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி 1898 -ஆம் ஆண்டு 23 கிலோமீட்டர் தொலைவிற்கு மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் காரைக்காலில் இருந்து, பேரளம், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வாய்ப்பு, மற்ற ஊர்களில் இருந்து காரைக்காலுக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டது.
இதன் மூலம் ஏராளமான பக்தர்கள் திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலயத்திற்கு ரயில் மூலம் வருகை தந்தனர். இந்த நிலையில் போதிய வருவாய் வரவில்லை என்று கூறி கடந்த 1987 ஆம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது இந்த பாதை மீண்டும் அமைக்கப்பட்ட ரயில் சேவை தொடங்க இருக்கிறது.
இத்திட்டத்தினால் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து நாகூர் வழியாக காரைக்காலுக்கும், மயிலாடுதுறை, பேரளம் வழியாக காரைக்கால், திருநள்ளாறு க்கும் வேளாங்கண்ணிக்கும் பயணிகள் நேரடியாக வந்து சேர முடியும். வடமாநில வழிபாட்டுத் தலங்களுக்கும், நவகிரக தலங்களில் முக்கிய ஸ்தலமாக விளங்கும் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ள திருநள்ளாறுக்கும் நேரடி தொடர்பு ஏற்படும்.
தற்போது கேரளாவில் உள்ள பயணிகள் வேளாங்கண்ணி செல்ல வசதியாக அங்கு உள்ள எம்.பிக்கள் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரயிலை வாங்கி கடந்த ஒரு வருடமாக இயங்கி வருகிறது. இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க கடுமையாக ரயில்வே வாரியத்திடம் போராடி வருகிறார்கள்.
ஆனால் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒருசில பகுதிகள், முழு திருவனந்தபுரம் மாவட்டம், முழு கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்ட மக்களுக்கு திருச்சி முதல் காரைக்கால் வரை உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர் பகுதிகளுக்கு செல்ல நேரடியாக ரயில் சேவை இல்லை.
தற்போது இயக்கப்பட்டு வரும் மதுரை – புனலூர் தினசரி ரயிலை திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால் வழியாக திருநள்ளாறு வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். ஒருசில நேரங்களில் திருநள்ளாறு ரயில் நிலையத்தில் இந்த ரயிலை நிறுத்தி சுத்தம் செய்தல், தண்ணீர் பிடித்தல் போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள போதிய இடவசதிகள் குறிப்பாக கூடுதல் நடைமேடைகள் இல்லாமல் இருந்தால் இந்த ரயிலை மைலாடுதுறையிலிருந்து புறப்படுமாறு இயக்கலாம். மைலாடுதுறையிலிருந்து புறப்பட்டு பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் , தஞ்சாவூர் வழியாக திருச்சி வந்து இயக்கலாம் என்ற ஆலோசனையும் வைக்கப்படுகின்றது.
நவகிரக எக்ஸ்பிரஸ்: தமிழகத்தில் ஒன்பது நவகிரக ஆலயங்கள் சூரியன், சந்திரன், சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்களுக்கு கோவில்கள் தஞ்சை மாவட்டத்திலும், செவ்வாய், கேது,புதன், கோவில்கள் நாகை மாவட்டத்தில், குரு பகவான் கோவில் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில், சனி பகவான் ஆலயம் புதுவை மாநிலம் திருநள்ளாறில் உள்ளன.
இவை அனைத்தும் இந்த பகுதிகளுக்கு அருகில், சுற்றி அமைந்திருக்கின்றன. எனவே இந்த ரயிலை நீட்டிப்பு செய்து இயக்கும் போது சரியான முறையில் திட்டமிட்டால் எல்லா ஸ்தலங்களையும் ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது விடலாம். ஆகவே இந்த ரயிலுக்கு நவகிரக எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்க வேண்டும்.
1, திங்களூர் (சந்திரன்): நவகிரக தலங்களில் நீங்கள் முதலில் பார்க்க வேண்டியது திங்களூர்தான்.
2, ஆலங்குடி (குரு) : இரண்டாவது ஆலங்குடியை குரு கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயில் சுவாமி தரிசனத்தை முடித்துவிடலாம்
3, திருநாகேஸ்வரம் (ராகு) : ராகுபகவான் என்று கோவில் உள்ள திருநாகேஸ்வரம் ராகு கோயிலை தரிசனம் செய்யலாம்.
4, சூரியனார் கோவில் (சூரியன்) : சூரியனார் கோவில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து கொள்ளாம்.
5. கஞ்சனூர் (சுக்கிரன்) : சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது. இந்த கோவில் நடை 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும்
6. வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) : நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு வைத்தீஸ்வரன் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளலாம்.
7. திருவெண்காடு (புதன்) : வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து அடுத்து ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் தரிசித்துவிடலாம்.
8. கீழ்பெரும்பள்ளம் (கேது) : கீழ்பெரும்பள்ளம் கோயிலையும் தஞ்சாவூரில் இருக்கும் பிரகதீஸ்வரர் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று இங்கு அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.
9. திருநள்ளாறு (சனி) : நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் தரிசிக்கலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ரூ.2,291 கோடியை மத்திய அரசு விடுவிக்க கோரி தமிழக அரசு வழக்கு
புதன் 21, மே 2025 11:51:53 AM (IST)

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு: விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
புதன் 21, மே 2025 11:32:05 AM (IST)

பாலியல் புகார் எதிரொலி: திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்!
புதன் 21, மே 2025 11:22:57 AM (IST)

ஐ.டி நிறுவன அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை, பணம் கொள்ளை : நேபாள தம்பதி கைது
புதன் 21, மே 2025 10:32:04 AM (IST)

சூரிய ஒளி மின்சார திட்டம் அமைக்க மத்திய அரசு மானியம் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 20, மே 2025 5:46:45 PM (IST)

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.2.62 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
செவ்வாய் 20, மே 2025 4:19:46 PM (IST)
