» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரையில் கனமழையால் சுவர் இடிந்து விபத்து: சிறுவன் உள்பட 3 பேர் பலி

செவ்வாய் 20, மே 2025 11:55:53 AM (IST)

மதுரையில் மழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 2 பெண்கள், சிறுவன் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டு, மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் கிராமத்தில் மழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருந்தது.

இதனை முன்னிட்டு, அந்த பகுதியில் மின் தடையும் ஏற்பட்டது. இதனால், வீட்டில் இருந்தவர்களில் சிலர் வெளியே வந்து அமர்ந்து பேசி கொண்டு இருந்துள்ளனர். இதன்படி, நேற்றிரவு 7 மணியளவில் வீட்டின் வாசலில் அமர்ந்து அம்மா பிள்ளை என்பவர், அவருடைய பக்கத்து வீட்டில் வசித்த வெங்கட்டி அம்மாளுடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது, அம்மா பிள்ளையின் பேரன் வீரமணியும் (வயது 10) உடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் மழையால், வீட்டின் ஒரு பக்க சுவர் சுவர் இடிந்து விழுந்தது. சுவரின் இடிபாடுகள், இந்த 3 பேரின் மீது விழுந்ததில் அவர்கள் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் வெங்கட்டி சிறிது நேரத்திலேயே உயிரிழந்து விட்டார். மற்ற 2 பேரும் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் இன்று உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

வருத்தம்மே 20, 2025 - 09:22:18 PM | Posted IP 172.7*****

வருத்தமான செய்தி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory