» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்: அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 21, மே 2025 3:57:21 PM (IST)

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் இராணி தோட்டம் பணிமனை, தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் கழகம் ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனை, ஈத்தாமொழி முதல்வர் மருந்தகம், ஈத்தாமொழி, மேலகிருஷ்ணன் புதூர், பறக்கை, வடக்கு தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (21.05.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் இராணித்தோட்டம் பணிமனையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொலைதூரப் பேருந்துகளின் இயக்கம் குறித்தும், பணிமனை பேருந்துகளின் பராமரிப்பு பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும், டயர் பிரிவில் (Tyre Section) தொழில்நுட்ப பணியாளர்களிடம் வேலையின் தன்மை குறித்தும், டயரின் உழைப்புத் திறன் குறித்தும் கேட்டறியப்பட்டது. தொடர்ந்து இராணித்தோட்டம் 2 மற்றும் 3 பணிமனை ஆய்வு செய்யப்பட்டது. இங்கு பேருந்துகளுக்கு டீசல் பம்ப் வைத்து பேருந்துக்கு எதன் அடிப்படையில் டீசல் நிரப்பப்படுகிறது என்பது குறித்தும், ஒவ்வொரு பேருந்துக்கும் Diesel Target எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது என்ற விவரங்கள் கேட்டறியப்பட்டது.
மேலும் இராணித்தோட்டம் மத்திய தொழிற்கூடம் ஆய்வு செய்யப்பட்டது. இங்கு பேருந்தின் உதிரிப்பாகங்கள் எவ்வாறு மறுசீரமைப்பு செய்யப்படுகிறது என்பது குறித்து ஒவ்வொரு பிரிவாக சென்று ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக எஞ்சின், கியர்பாக்ஸ், கிளட்ச், ஆல்டர்னேட்டர் போன்ற உதிரிப்பாகங்கள் எவ்வாறு மறுசீரமைப்பு செய்து பேருந்தில் பொருத்தப்படுகிறது என்பது குறித்து தொழில்நுட்ப பணியாளர்களிடம் கேட்டறியப்பட்டது.
பின்பு பேருந்தின் சீட், சீட் கவர் தயாரிப்பது குறித்தும், கவரின் தரம், அளவுகள் குறித்தும், பேருந்தில் தானியங்கி கதவுகள் பொருத்துவது குறித்த செயல்முறை விளக்கம் பார்வையிடப்பட்டது. மேலும் மத்திய தொழிற்கூடத்தில் தேவையில்லாத பொருட்களை அகற்றியும், இடங்களை சுத்தமாக வைக்கவும், மத்திய தொழில் கூடத்தில் தரை தளங்களின் சேதம் அடைந்திருப்பதை பார்வையிட்டு, அதனை சரிசெய்வதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து வழங்கும்படி துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் ஆசாரிப்பள்ளம் மருந்து கிடங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மருந்து பொருட்களின் இருப்புகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறியப்பட்டது. 5 மாதத்திற்கு தேவையான மருந்து மாத்திரைகளை மருந்து கிடங்களில் சேமித்து வைக்க வேண்டுமெனவும், எல்லா மருந்துகளும் மாவட்ட மருந்து கிடங்கில் இருந்து விநியோகிக்க தயாராக இருக்க வேண்டும் எனவும், மருந்தகங்களுக்கு தேவையான மருந்துக்களை தாமதிக்காமல் உடனே வழங்க வேண்டுமெனவும், மருந்து பெட்டிகளை தூக்க பயன்படுத்தும் ஸ்டேக்கரில் கைபிடி வைக்க வேண்டுமெனவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிக்சை மையம் மற்றும் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு மையம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து ஈத்தாமொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, மருந்து பொருட்களின் இருப்புகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறியப்பட்டது. மருந்தகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளான Fridge, AC, Rack, Computer, Printer ஆகியவை நிறுவப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு தட்டுபாடு இன்றி மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட மணக்காவிளை சாலை பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக புகார்கள் வந்ததைத்தொடர்ந்து, அப்பகுதியினை நேரில் பார்வையிட்டு, சாலையின் கரையோரம் புதர்கள் மண்டி, குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. அதனை உடனடியாக சரிசெய்ய வட்டார வளர்ச்சி அலுவலர்க்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் சாலையோரத்தில் ஏற்பட்டுள்ள மண்அரிப்பினை சீரமைத்து, தற்காலிகமாக வேகத்தடை மற்றும் பேரிக்கார்டு வைத்து பாரமரித்திடவும், தொடர்ந்து நிரந்தரமாக சீரமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதனைத்தொடர்ந்து நீர்வள ஆதாராத்துறை சார்பில் நிரந்தர வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ.47 இலட்சம் மதிப்பில் பறக்கை குளத்தின் மடை கட்டுமான பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, மதகுகள் சீராக செயல்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் வடக்கு தாமரைக்குளம் பழையாற்றில் உள்ள ஆகாயத்தாமரைகளை வரும் தென்மேற்கு பருவமழைக்கு முன்னதாக அகற்றி சீரமைத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இராமலெட்சுமி, நாகர்கோவில் மண்டல போக்குவரத்து பொதுமேலாளர் பாலசுப்பிரமணியம், துணை மேலாளர் ஜெரோலின், மாவட்ட சுகதார அலுவலர் பிரபாகரன், நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் வசந்தி ஜெயா, உதவி செயற்பொறியாளர் ரமேஷ் ராஜன், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் கிங்ஸ்லி, உறைவிட மருத்துவர் விஜயலெட்சுமி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், பணிமனை கிளை மேலாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உரிமைக்கொடி ஏந்துவேன்; ஊர்ந்து போகமாட்டேன்: இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
புதன் 21, மே 2025 5:22:42 PM (IST)

நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
புதன் 21, மே 2025 5:15:02 PM (IST)

வீடு, தொழிற்சாலைகளில் வயரிங் பணி முடிந்ததும் சோதனை அறிக்கை கட்டாயம்!
புதன் 21, மே 2025 5:02:36 PM (IST)

குமரி கடலில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
புதன் 21, மே 2025 4:43:23 PM (IST)

தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ரூ.2,291 கோடியை மத்திய அரசு விடுவிக்க கோரி தமிழக அரசு வழக்கு
புதன் 21, மே 2025 11:51:53 AM (IST)

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு: விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
புதன் 21, மே 2025 11:32:05 AM (IST)
