» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உரிமைக்கொடி ஏந்துவேன்; ஊர்ந்து போகமாட்டேன்: இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

புதன் 21, மே 2025 5:22:42 PM (IST)

தமிழகத்திற்காக எந்நாளும் உரிமைக் கொடியைத்தான் ஏந்துவேன். ஊர்ந்து போகமாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்திற்கான நியாயமான நிதி உரிமையை நிடிஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24ம் தேதி டில்லி செல்கிறேன். சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?

பா.ஜ., உடன் கூட்டணி கிடையாது என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறி வெள்ளைக்கொடி ஏந்திச் சென்ற பழனிசாமி, என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா? எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்.

ஊர்ந்து போகமாட்டேன். இன்றைக்குக் கூட, தமிழகத்தின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். தமிழகத்திற்கான நிதியைப் போராடிப் பெறுவேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory