» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி கடலில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

புதன் 21, மே 2025 4:43:23 PM (IST)



சர்வதேச சுற்றுலா நகரமான கன்னியாகுமரி கடலில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச சுற்றுலா நகரமான கன்னியாகுமரியில் உள்ள கடலில் சமீப காலமாக சாக்கடை நீர் கலப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து வருகிறது. இதனால்பொது மக்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சுமார் 25,000 பேர் வசிக்கும் இந்த பகுதியில் வீடுகள், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட வைகளில் இருந்து வெளி யேறும் சாக்கடை நீர் எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக கடலில் கலக்கிறது. 

இந்த சாக்கடையுடன் மனித கழிவுகளும் கலந்து கடலை மாசுபடுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் புகார். கடலில் கலக்கும் சாக்கடை நீரால் மக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு உள்ளாகி வருவதால் உடனடியாக கழிவுகள் கடலில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory