» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முழு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்: ஆட்சியர்
சனி 2, ஆகஸ்ட் 2025 4:25:20 PM (IST)

40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக முழு உடலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாமினை இன்று சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்ததைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, முன்னிலையில் குத்துவிளக்கேற்றினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்- தமிழ்நாட்டை நோயில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் இன்று துவக்கி வைத்தார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் 30 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. சனிக்கிழமை தோறும் நடைபெறும் இந்த முகாம் பிப்ரவரி மாதம் வரை நடத்தப்படுகிறது.
அதனடிப்படையில் இன்று நமது மாவட்டத்தில் முதல் முகாம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இம்முகாமில் சிறந்த மருத்துவர்களை வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தங்களது முழு உடலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. நடைபெற்ற முகாம்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அட்டை பெற்ற நபர்களுக்கு, இம்முகாமில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது நடைபெற்றுவரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற 7 முகாம்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 நபர்களுக்கு முகாமில் சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முகாமில் ஆண்கள், பெண்கள், கர்ப்பிணிகள் (மகப்பேறு) என மூன்றாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு இரத்த பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான உடல் பரிசோதனைகள் மேற்கொண்ட பின், எக்ஸ்ரே எடுத்த பின் நீங்கள் சிறப்பு மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிட்சை, எலும்பு முறிவு மருத்துவம், பேறுகால மருத்துவம், குழந்தை நல மருத்துவம், இதயநல சிறப்பு மருத்துவம், நரம்பியல் சிறப்பு மருத்துவம், நுரையீரல் சிறப்பு மருத்துவம், நீரிழிவு நோய்கான சிறப்பு மருத்துவம், தோல் சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம், கண் சிறப்பு மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், இயற்கை மருத்துவம், உணவியல் ஆலோசணை உள்ளிட்ட 17 சிறப்பு மருத்துவர்கள் உள்ளார்கள்.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் பரிசோதனை மேற்கொள்பவர்களின் விபரங்கள் மற்றும் பரிசோதனை விவரங்கள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்யப்படும். இங்கு உங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்த விவரங்கள் அனைத்தும் ஆன்லைனில் இருக்கும். எந்த ஒரு அரசு மருத்துவமனைக்கு சென்றாலும் ஏற்கனவே நீங்கள் என்ன சிகிச்சை மேற்கொண்டு உள்ளீர்கள் என்ற விவரம் அதன் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் இருதய நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள் உட்பட அனைத்து வகையான நோய்களுக்கான நிபுணர்களும் முகாமிற்கு வருகை தந்து, சிகிச்சை அளித்து வருகிறார்கள். கர்ப்பப்பை உள்ளிட்ட புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பது குறித்தும் பெண்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனைக்கு வரும் பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும். தங்களது உடலையும் முழுமையாக பரிசோதித்து கொள்வது அவசியமாகும். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமுக்கு செல்வோர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். அதில் பரிந்துரை செய்யப்படுபவர்கள் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளுக்கு அருகாமையில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் – முழு உடல் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), செ.ராஜேஷ் குமார் (கிள்ளியூர்), ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) சுரேஷ்பாலன், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) சகாய ஸ்டீபன் ராஜ், துணை இயக்குநர் (தொழுநோய்) கிரிஜா, தொழிலாளர் நலத்துறை உதவி இயக்குநர் ராஜ்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் அரவிந்த் ஜோதி, மாநகர் நகர் நல அலுவலர் ஆல்பர் மதியரசு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், மாவட்ட தாட்கோ மேலாளர் தெய்வக்குருவம்மாள், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராம பாண்டியன், மாவட்ட சித்த மருத்துவர் அனிதா, மாவட்ட காசநோய் மருத்துவர் சுபேர்கான், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபல திரைப்பட நடிகர் மதன் பாப் காலமானார்
சனி 2, ஆகஸ்ட் 2025 9:16:01 PM (IST)

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி தான்: ராமதாஸ் குற்றச்சாட்டு
சனி 2, ஆகஸ்ட் 2025 5:30:53 PM (IST)

த.வெ.க. பேனர்களில் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்த தடை!
சனி 2, ஆகஸ்ட் 2025 4:53:40 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச செல்போன் பழுதுபார்த்தல் பயிற்சி
சனி 2, ஆகஸ்ட் 2025 3:32:12 PM (IST)

தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும்: எடப்பாடி பழனிச்சாமி உறுதி!
சனி 2, ஆகஸ்ட் 2025 3:11:59 PM (IST)

கல்வியும், மருத்துவமும் திமுக ஆட்சியின் இரு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சனி 2, ஆகஸ்ட் 2025 10:55:08 AM (IST)
