» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி தான்: ராமதாஸ் குற்றச்சாட்டு
சனி 2, ஆகஸ்ட் 2025 5:30:53 PM (IST)
எனது தைலாபுரம் வீட்டில் உளவுக்கருவி (ஒட்டுக் கேட்கும் கருவி) வைத்தது அன்புமணிதான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

டாக்டர் ராமதாஸ் கூறிய இந்த குற்றச்சாட்டு கட்சியினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னையில் இருந்து தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 12-ந்தேதி திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து அந்த கருவியை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இந்த கருவியை டாக்டர் ராமதாஸ் வீட்டில் யார் வைத்தார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி கிளியனூர் காவல் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் புகார் அளித்தார்.
அதன் பேரில் கடந்த 17-ந்தேதி 8 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் டாக்டர் ராமதாஸ் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதனிடையே தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் ஆய்வுக்காக கொண்டு சென்ற கருவியை மீண்டும் டாக்டர் ராமதாசிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து ஒட்டு கேட்கும் கருவி ஆய்வுக்காக கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: எனது தைலாபுரம் வீட்டில் உளவுக்கருவி (ஒட்டுக் கேட்கும் கருவி) வைத்தது அன்புமணிதான். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி ராமதாஸ் தான். அன்புமணி ஒவ்வொருவரிடமும் ஒரு பொய்யைக் கூறி வருகிறார். செயல் தலைவரான அன்புமணி அறிவித்துள்ள பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளுக்கு எதிரானது; சட்ட விரோதம்.
பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும். நான் வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சியை வேறும் யாரும் உரிமை கோர முடியாது. பாமக நான் உருவாக்கி கட்சி; நான் தான் நிறுவனர், தலைவர் எல்லாம். பூம்புகார் மகளிர் மாநாட்டில் 3 லட்சம் பெண்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபல திரைப்பட நடிகர் மதன் பாப் காலமானார்
சனி 2, ஆகஸ்ட் 2025 9:16:01 PM (IST)

த.வெ.க. பேனர்களில் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்த தடை!
சனி 2, ஆகஸ்ட் 2025 4:53:40 PM (IST)

40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முழு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்: ஆட்சியர்
சனி 2, ஆகஸ்ட் 2025 4:25:20 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச செல்போன் பழுதுபார்த்தல் பயிற்சி
சனி 2, ஆகஸ்ட் 2025 3:32:12 PM (IST)

தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும்: எடப்பாடி பழனிச்சாமி உறுதி!
சனி 2, ஆகஸ்ட் 2025 3:11:59 PM (IST)

கல்வியும், மருத்துவமும் திமுக ஆட்சியின் இரு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சனி 2, ஆகஸ்ட் 2025 10:55:08 AM (IST)
