» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 52,098 மனுக்கள் பெறப்பட்டுள்ளது: ஆட்சியர் தகவல்
புதன் 13, ஆகஸ்ட் 2025 5:04:54 PM (IST)

குமரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ஜூலை 15 முதல் ஆக.12 வரை 102 முகாம்கள் நடத்தப்பட்டு 52,098 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை கடந்த 15.07.2025 அன்று துவக்கி வைத்ததைத்தொடர்ந்து, இன்று (13.08.2025) கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் பத்மநாபபுரம் லெட்சுமி மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் பகுதிகளிலேயே நேரிடையாக சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற, உங்களுடன் ஸ்டாலின் என்ற அற்புதமான திட்டம் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை நடத்திட அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதனடிப்படையில் இன்று கல்குளம் வட்டம் பத்மநாபபுரம் நகராட்சி வார்டு 10,11,12 உள்ளிட்ட பகுதி பொதுமக்களுக்கு பத்மநாபபுரம் லெட்சுமி மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை நேரில் பார்வையிட்டு, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களிடம் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைக்காமல் துரிதமாக கணினியில் பதிவேற்றம் செய்திட முகாம் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து நமது மாவட்டத்தில் 15.07.2025 முதல் 12.08.2025 வரை 102 முகாம்கள் நடத்தப்பட்டு 52,098 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளின் அருகாமையில் நடைபெறும் முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். முகாமில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன், கல்குளம் வட்டாட்சியர் ஜாண்ஹெனி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவனுக்கு உயர்கல்வி!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:33:01 AM (IST)

முதல்வர் ஸ்டாலினுடன் ராஜ்நாத் சிங் பேச்சு : சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரினார்
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:17:21 AM (IST)

மதுரை தவெக மாநாடு: போக்குவரத்து வழித்தட மாற்றங்கள் குறித்து காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:00:34 AM (IST)

குமரி மாவட்டத்தில் 3 தாலுகாக்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:51:04 AM (IST)

ஆரல்வாய்மொழியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நின்று சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள்!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:48:08 AM (IST)

திருச்செந்தூர் கோவில் ஆவணி 5-ம் திருவிழா: சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:20:56 AM (IST)
