» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உங்களுடன் ஸ்டாலின்: முதல்வரின் பெயருக்கு தடை கோரியவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 3:54:06 PM (IST)
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை கோரிய பொதுநல வழக்கை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், அதிமுக வழக்கறிஞர் இனியன், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை கோரி பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக, அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வாழும் ஆளுமைகளின் பெயர்களை அரசு திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.
ஆனால், 'உங்களுடன் ஸ்டாலின்', 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டங்களை அதே பெயரில் செயல்படுத்த அனுமதி கோரி அரசுத் தரப்பில் திருத்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சி.வி.சண்முகம் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சி.வி.சண்முகத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், தமிழக அரசின் திருத்த மனு, அதிமுக வழக்கறிஞர் இனியன் தாக்கல் செய்த மனுக்கள், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி. எஸ். ராமன் மற்றும் திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆகியோர், இதே கோரிக்கையுடன் சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்த உத்தரவு நகலை தாக்கல் செய்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சி.வி.சண்முகம், 10 லட்சம் ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டதாக, தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கறிஞர் இனியனின் மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவனுக்கு உயர்கல்வி!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:33:01 AM (IST)

முதல்வர் ஸ்டாலினுடன் ராஜ்நாத் சிங் பேச்சு : சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரினார்
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:17:21 AM (IST)

மதுரை தவெக மாநாடு: போக்குவரத்து வழித்தட மாற்றங்கள் குறித்து காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:00:34 AM (IST)

குமரி மாவட்டத்தில் 3 தாலுகாக்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:51:04 AM (IST)

ஆரல்வாய்மொழியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நின்று சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள்!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:48:08 AM (IST)

திருச்செந்தூர் கோவில் ஆவணி 5-ம் திருவிழா: சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:20:56 AM (IST)
