» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமலாக்கத்துறை மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது: கனிமொழி எம்பி பேட்டி
சனி 16, ஆகஸ்ட் 2025 9:07:26 PM (IST)

அமலாக்கத்துறை உள்ளிட்ட எத்தகைய சோதனையையும் திமுக எதிர்கொள்ளும் என்று கனிமொழி எம்பி கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டடத்தை, கனிமொழி எம்பி திறந்து வைத்தார். விழாவில், அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தாராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி, "பாரதிய ஜனதா கட்சி அரசு ஒருபுறம் தேர்தல் கமிஷனை தனது கையில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தின் மீது ஏவி விட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மூத்த அமைச்சர்கள் அவர்கள் மீது தொடர்ந்து இன்கம் டேக்ஸ், இடி, சிபிஐ மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
தற்போது நடைபெற்று வரும் ரைடை திராவிட முன்னேற்ற கழகம் எதிர்கொள்ளும், நமது அமைச்சர் அவர்கள் எத்தனையோ சிக்கல்களை கடந்து கழகத்தோடு உறுதுணையோடு நிற்கக் கூடியவர். அதனால் எந்த பயமுறுத்தலும் கழக தோழர்களை தலைவர்களை அச்சுறுத்த முடியாது என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலக சமாதானத்தை வலியுறுத்தி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 1008 கஞ்சி கலயம், தீச்சட்டி ஊர்வலம்!
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 1:15:51 PM (IST)

தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 23 பவுன் நகைகள் திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!!!
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 9:00:10 AM (IST)

எம்எல்ஏ விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு
சனி 16, ஆகஸ்ட் 2025 5:38:53 PM (IST)

அமெரிக்க வரி உயர்வால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு: பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சனி 16, ஆகஸ்ட் 2025 5:29:16 PM (IST)

தூத்துக்குடியில் ஆறாவது புத்தகத் திருவிழா: பொது மக்களுக்கு ஆட்சியர் க.இளம்பகவத் அழைப்பு
சனி 16, ஆகஸ்ட் 2025 5:17:52 PM (IST)

தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சீமானுடன் சந்திப்பு : போராட்டங்களுக்கு ஆதரவு கோரினர்
சனி 16, ஆகஸ்ட் 2025 3:52:07 PM (IST)
