» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உலக சமாதானத்தை வலியுறுத்தி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 1008 கஞ்சி கலயம், தீச்சட்டி ஊர்வலம்!

ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 1:15:51 PM (IST)



உலக சமாதானத்தை வலியுறுத்தி கோவில்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 1008 கஞ்சி கலயம், தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் அருளாசியுடன் கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. அதிகாலையில் அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மகளிர் 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து உலகம் சமாதானம் வேண்டியும்,  மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், வைரஸ் தொற்றுநோய் நோய் நீங்கி, அனைத்து மக்களும்  நலமுடன் வாழவும் அன்னையிடம் வேண்டி மாபெரும் 1008 கஞ்சிக்கலயம், 26 அக்கினிசட்டி, 56 முளைப்பாலிகை ஏந்தி ஆன்மிக ஊர்வலம் நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் ஆன்மிக ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். 

ஊர்வலம் மந்தித்தோப்பு ரோடு, மாதாங்கோவில் தெரு, தெற்கு பஜார், செண்பகவல்லி அம்மன் கோவில் வழியாக மன்றம் வந்தடைந்தது. பக்தர்கள் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதனையடுத்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கிவைத்தார். 


நிகழ்ச்சியில் தளவாய்புரம் மன்ற தலைவர் ராஜ், கழுகுமலை மன்ற தலைவர் அழகர், திருவிக நகர் சக்தி பீட துணைத்தலைவர் திருஞானம், இந்திராநகர்மன்ற பொருளாளர் அழகு மாணிக்கம், மன்ற செயலாளர் வரலெட்சுமி, பொருளாளர் கற்பகவள்ளி, தகவல் தொழிநுட்ப பொறுப்பாளர் கோபிநாத், விஸ்வராஜ், ராஜலெட்சுமி, காசியம்மாள், ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory