» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 23 பவுன் நகைகள் திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!!!

ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 9:00:10 AM (IST)



ஆறுமுகநேரியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காமராஜபுரத்தைச் சேர்ந்த ஸ்டீபன் மகன் இம்மானுவேல் விஜயன் (56). தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி ஸ்டெல்லா மெர்லி­ன். இத்தம்பதியின் 2 மகன்களும் திருமணமாகி சென்னையில் வசிக்கின்றனர். இத்தம்பதி கடந்த வியாழக்கிழமை (ஆக. 14) சென்னையிலுள்ள உறவினர் விட்டுக்குச் சென்றிருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை, இவரது வீட்டுக்கு எதிரேயுள்ள கடைக்கு அவரது தாயும், தம்பி மகளும் சென்றனர். அப்போது, இம்மானுவேல் விஜயன் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். பீரோக்கள் உடைக்கப்பட்டு, தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து இம்மானுவேல் விஜயனுக்கும், ஆறுமுகநேரி காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

உதவி ஆய்வாளர் முத்து, போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் ஆய்வாளர் அருணாச்சலம், உதவி ஆய்வாளர் பழனிசெல்வி ஆகியோர் தடயங்களை சேகரித்தனர். மர்ம நபர்கள் வியாழக்கிழமை நள்ளிரவு கதவை உடைத்து வீடு புகுந்து 188 கிராம் நகைகள், 275 கிராம் வெள்ளிப் பொருள்கள், மடிக்கணினி உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்hகத் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory