» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 11, செப்டம்பர் 2025 4:31:50 PM (IST)
தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக டிஜிபி-யாக பணிபுரிந்துவந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ஆம் தேதி பணி ஓய்வு பெற்றதை அடுத்து பொறுப்பு டிஜிபி-யாக வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் வரதராஜ் என்பவர் சார்பில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தற்காலிக அடிப்படையில் டிஜிபி நியமிக்க கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தது சட்டவிரோதம் என்று வழக்கறிஞர் வரதராஜ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து தீர்ப்பு கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி டிஜிபி நியமனம் செய்யப்பட இருப்பதால், மேற்கொண்டு இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. உச்சநீதிமன்றம் ஏற்கனவே யு.பி.எஸ்.சி.க்கு இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் நாங்கள் தலையிட விரும்பவில்லை. டிஜிபி பொறுப்பு காலியாக இருந்த நிலையில், பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

சென்னையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை: விமானங்கள் தாமதம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:40:09 PM (IST)

தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:12:21 PM (IST)

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் புதிய கட்சி உதயம்: கொடி அறிமுகம்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:17:34 AM (IST)
