» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம்: தவெக தலைவர் விஜய் மரியாதை!!

வியாழன் 11, செப்டம்பர் 2025 4:53:12 PM (IST)



இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அவரது படத்துக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனார். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை. தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன் எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory