» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பணிகள் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படாத கழிப்பறைகள்: மக்கள் அவதி!

சனி 4, அக்டோபர் 2025 11:41:35 AM (IST)



குருந்தன்கோடு இந்திரா நகர் காலனியில் பணிகள் முடிந்து 8-வருடங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாத கழிப்பறைகளை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இந்திரா நகர் காலனி மக்களுக்கு சுகாதார வசதிக்காக கடந்த 2018-ஆம் ஆண்டு ஆதி திராவிடர் பிற்படுத்தப்பட்டோர் இந்திரா நகர் காலனி மக்களுக்கு கிராமப்புற தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூபாய் 2 - லட்சம் மதிப்பீட்டில் 5-  பொது கழிப்பறைகள்  கட்டி முடிக்கப்பட்டது. 

ஆனால் இன்று வரை திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது  இன்னும் தண்ணீர் இணைப்பு கொடுக்கவில்லை என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். ஆதிதிராவிட பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அரசு பல நலத்திட்டங்கள் வழங்கியும் அது எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

இதுபோன்று பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் அரசுக்கும் பயனில்லை எங்களுக்கும் பிரயோஜனம் இல்லை. பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் அத்தியாவசியமான கழிவறைகளை திறக்க  மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திரா நகர் காலனி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory