» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி கல்லூரியில் 2 ஆண்டு டிப்ளோமா பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

சனி 4, அக்டோபர் 2025 4:04:45 PM (IST)

பேச்சிப்பாறை அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி கல்லூரியில் 2 ஆண்டு டிப்ளோமா தோட்டக்கலை படிப்பிற்கு உடனடி சேர்க்கை நடைபெறுகிறது.

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில் இரண்டு வருட டிப்ளோமா தோட்டக்கலை படிப்பிற்கு உடனடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. BC - 16 , BCM - 3 & SCA - 1 ஆகிய காலியிடங்கள் உள்ளன. பேச்சிப்பாறை அரசு பள்ளி மற்றும் விவசாய கல்லூரியில் உடனடி சேர்க்கைக்கு நேரில் வரவும்.

அசல் சான்றிதழ்கள் மற்றும் கவுன்சிலிங் கட்டணம் ₹.5400/- மட்டுமே கொண்டுவந்தால் போதுமானது. முதலாம் ஆண்டு மொத்த கட்டணம் ₹11000/- இரண்டு ஆண்டுகள் படித்து முடித்தவுடன் அக்ரிகல்சர் அசிஸ்டெண்ட் தேர்வு எழுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அக்ரிகல்சர் அலுவலங்களில் வேலைவாய்ப்பினை பெறலாம். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு பழபண்ணை நர்சரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பேச்சிப்பாறை அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் வேலை பெறலாம். பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்.

சுயதொழில் தொடங்கவும் விவசாய கடன் பெறலாம். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு வேளாண்மை சார்ந்த அலுவலகங்களிலும் ஆராய்ச்சி நிலையங்களிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த கடைசி வாய்ப்பினை பயன்படுத்தி அட்மிஷன் பெறுமாறும் இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் அட்மிஷன் தொடர்பான விசாரணைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் பேச்சிப்பாறை அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி கல்லூரி முதல்வர்: 94424 50976, பேச்சிப்பாறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் 9486447128, 94898 27527. இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory