» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உணர்வுப் பூர்வமான திரைப்படம்: பைசன் படக்குழுவுக்கு அண்ணாமலை பாராட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 4:34:52 PM (IST)
உணர்வுப் பூர்வமான திரைப்படம் என்று பைசன் படத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒரு கிராமத்து இளைஞன், தனது லட்சியத்தை அடைய எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சந்திக்கும் சவால்கள், சமூகம் சார்ந்த சிக்கல்கள் என, அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் சகோதரர் மாரி செல்வராஜ் . திரைப்படத்தின் பல காட்சிகளில், உணர்வுப் பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது.
அர்ஜுனா விருது வென்ற இந்தியக் கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களது வாழ்க்கையை, மிக அற்புதமாக திரையில் தந்திருக்கிறார் சகோதரர் மாரி செல்வராஜ் . அவரது சாதனை அத்தனை எளிதாகக் கிடைத்து விடவில்லை. சாதிக்க விரும்பும் இளைஞனுக்கு, சமூகம் பல வழிகளில் வேலியிட்டாலும், அந்த வேலியின் உயரத்தைத் தாண்டி வளர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான நம் மண்ணைச் சேர்ந்த நாயகன் மணத்தி கணேசன் வரலாற்றை, மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மேலும், சமூக ஒற்றுமை வேண்டும் என்ற தனது ஆழ்ந்த விருப்பத்தையும், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதாநாயகன் துருவ், இந்தத் திரைப்படத்துக்காக தன்னையே அர்ப்பணித்திருப்பதை உணர முடிகிறது. அண்ணன் பசுபதி , லால் ஆகியோரின் நடிப்புத் திறனைக் குறித்து நான் புதியதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அனைத்து நடிகர்களுமே தங்கள் அற்புதமான திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.
சகோதரர் மாரி செல்வராஜ் , மேலும் பலப்பல அற்புதமான திரைப்படங்களைத் தர வேண்டும். மக்களை ஒன்றிணைக்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமையவும், சமூகம் சார்ந்த அவரது பயணம் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கந்த சஷ்டி விழா 2வது நாள் : வெள்ளி சப்பரத்தில் சுவாமி வீதியுலா
வியாழன் 23, அக்டோபர் 2025 8:26:08 PM (IST)

குடிநீரின் குளோரினேஷன் அளவு : ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:50:06 PM (IST)

தாம்பரம்-செங்கல்பட்டு 4-வது புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ரூ.157 கோடி: பாஜக வரவேற்பு!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:38:51 PM (IST)

மனோரமா மகன் பூபதி மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் மு.வீரபாண்டியன் இரங்கல்!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:14:33 PM (IST)

தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு வழங்கும் திட்டம்: தமிழக அரசு அனுமதி!
வியாழன் 23, அக்டோபர் 2025 4:50:54 PM (IST)

பொட்டலூரணி மக்களை விடுதலை செய்ய வேண்டும்: சுப. உதயகுமாரன் வலியுறுத்தல்
வியாழன் 23, அக்டோபர் 2025 11:53:33 AM (IST)
