» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வங்கக்கடலில் புயல்: சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

வெள்ளி 24, அக்டோபர் 2025 4:48:53 PM (IST)

தமிழகத்தில் வருகிற அக். 27 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வருகிற 27 ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி அக். 27 ஆம் தேதி திங்கள்கிழமை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று(அக். 24) கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் நாளை(அக். 25) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக். 26 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும்

அக். 28 ஆம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுங்கு மட்டும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory