» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் குளம் போல மாறிய அரசுப் பள்ளி : பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம்

வெள்ளி 24, அக்டோபர் 2025 5:15:54 PM (IST)



தூத்துக்குடி அரசுப் பள்ளியில் குளம் போல தேங்கியுள்ள மழை நீரால் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். 

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் சி.வ. அரசு பள்ளி உள்ளது இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அதுபோல இந்த வளாகத்தில் தான் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளிட்ட கல்வித்துறை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் இந்த வளாகத்துக்குள்ள தான் இயங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும் போது இங்கு மழை நீர் குளம் போல் பல மாதங்கள் தேங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் தூத்துக்குடியில் பெய்த கனமழையால் சி.வ. அரசு பள்ளி வளாகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உள்ள வளாகம் முழுவதும் மழை நீர் குளம் போல் தொடங்கி உள்ளது. 

கல்வித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் பணியாளர்கள் அனைவரும் தேங்கி கிடக்கும் மழை நீரில் தான் நீந்தி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த கட்டிடம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளை பொதுப்பணித்துறை தான் செய்ய வேண்டும். 

ஆனால் பள்ளி ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறிய போது, நீங்களே உங்கள் செலவில் மழை நீரை அப்புறப்படுத்துங்கள் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆண்டு தோறும் பராமரிப்பு பணிக்கு என்று பல லட்சங்களை பெறும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொறுப்பற்ற பதிலால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளி வளாகம் மழை நீரால் குளம் போல் தேங்கி இருப்பதுகுறித்து ஆசிரியர்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து உடனடியாக பள்ளி வளாகத்துக்கு வருகை தந்த மேயர் மின்மோட்டார் அங்கு அமைத்து அங்கு தேங்கியுள்ள மழை நீரை முழுவதும் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு வருகிறார். 

கடந்த 1960 ஆம் ஆண்டு இந்தப் பள்ளி நகராட்சி கட்டுப்பாட்டில் இருந்துள்ளதற்கான கல்வெட்டு உள்ளது. ஆகையால் தமிழக அரசு உடனடியாக சி.வ. பள்ளியை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory