» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெள்ள அபாய அளவை எட்டிய பேச்சிப்பாறை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

வெள்ளி 24, அக்டோபர் 2025 5:36:20 PM (IST)



பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதி மக்கள் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணை வெள்ள அபாய அளவான 42.00 அடியை 24.10.2025 இன்று எட்டியுள்ளது. அணை நீர்மட்டம் அதிக மழையினால் 46.00 அடியினை அடையும் பட்சத்தில் அதற்கு மேல் வரும் உபரிநீர் பேச்சிப்பாறை அணையிலிருந்து கோதையாற்றில் திறந்துவிடபட்டு களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை, இரையுமன்துறை வழியாக தேங்காப்பட்டணத்தில் கடலில் சென்று சேரும்.

எனவே கரையோரமாக வசிக்கும் கோதையாறு தாமிரபரணி ஆற்றின் (குழித்துறை ஆறு) பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory