» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு விழா : பிரதம பேராயர் ரூபன் மார்க் பங்கேற்பு

திங்கள் 8, டிசம்பர் 2025 10:37:57 AM (IST)


நாகர்கோவிலில் சி.எஸ்.ஐ. குமரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திருச்சபை பிரதம பேராயர் ரூபன் மார்க் பங்கேற்றார்.

கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயத்தின் 7 வது பேராயர் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது.இதில் செல்வமணி கிறிஸ்டோபர் விஜயன் அதிக வாக்குகள் பெற்று பேராயராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய பேராயர் பேரருள்பொழிவு மற்றும் பதவியேற்பு விழா நேற்று நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கஸ்பா ஆலயத்தில் வைத்து நடந்தது.

இதில் தென்னித் திய திருச்சபை பிரதம பேராயர் ரூபன் மார்க் தலைமை வகித்து புதிய பேராயர் செல்வமணி கிறிஸ்டோபர் விஜயனை பேரருள்பொழிவு செய்து பேராயர் செங்கோல் வழங்கி திருநிலைப்படுத்தினார். கன்னியாகுமரி பேராய செயலாளர் பைஜூநிசித் பால் பேராயருக்கு சட்ட புத்தகம் வழங்கினார். தொடர்ந்து பிரதமபேராயர் ரூபன் மார்க் பேசினார்.

நிகழ்ச்சியில் தென்னிந்திய திருச்சபை பொது செயலாளர் பெர்னாண்டஸ் ரத்தினராஜா, பொருளாளர் விமல் சுகுமார் முன்னிலை வகித்தனர். கன் னியாகுமரி பேராயம் உபதலைவர் முத்துசுவாமி கிறிஸ்துதாஸ் அனைவரையும் வரவேற்றார். பேரருள்பொழிவு பெற்ற பேராயர் கிறிஸ் டோபர் விஜயன் பணியேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை, வாழ்த்து கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்ஐ பேராயர்கள், மற்றும் தென்னிந்திய திருச்சபை மற்றும் பல பேராயங்களின் நிர்வாகிகள், கன்னியாகுமரி பேராயத்தின் பொறுப்பாளர்கள், சேகர ஆயர்கள், ஆயர்கள் திருப் பணி பணியாளர்கள், சபை மூப்பர்கள், கலந்து கொண்டனர். விழா ஏற் பாடுகளை முதன்மை பேராயரின் பதிலாள் ராய்ஸ் மனோஜ் விக்டர், பொருளாளர் ஜெயகர் ஜோசப் ஆகியோர் செய்து இருந்தனர், நிறைவாக கன்னியாகுமரி பேராய செயலாளர் பைஜூ நிசித் பால் நன்றி கூறினார். 


புதிதாக பதவியேற்ற பேராயர் செல்வமணி கிறிஸ்டோபர் விஜய னுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், ராபர்ட் புரூஷ் எம். பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், எம்.எல்.ஏ. க்கள் ராஜேஷ்குமார். தாரகை கத்பட், துணை மேயர் மேரி பிரின்சி லதா. முன்னாள் நகர்மன்ற தலைவர் அசோகன் சாலமன் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory