» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முக்தாரை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் : சரத்குமார் எச்சரிக்கை!

திங்கள் 8, டிசம்பர் 2025 4:03:30 PM (IST)

பெருந்தலைவர் காமராஜர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த முக்தாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெருந்தலைவரின் நற்பெயருக்கு களங்கம் கற்பித்து, பல ஆதாரமற்ற கருத்துகளையும், பொய் குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்த யூட்யூபர் முக்தார் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தேன்.

தமிழக வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு 1954 - 1963 வரை 9 ஆண்டுகள் தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கிய ஒப்பற்ற தலைவர், பெருந்தலைவர் அவர்கள் குறித்த முக்தாரின் முகாந்திரம் இல்லாத கருத்து பதிவிற்கு இன்று வரை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசின் செயல் கண்டனத்திற்குரியது.

சமூக வலைதளங்களின் தாக்கத்தால் இன்றைய சமூகத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகள் பெரும்பாலும் வலம் வருவதை எண்ணி சமுதாய மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு உடனடியாக முக்தார் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அனைவரையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவோம்.

வரலாற்றை திரிக்க முயலும் நபர்கள் மீதும், யூட்யூப் சேனல் மீதும் தண்டனைக்குரிய குற்றம் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்பதை சுட்டிக் காட்டுகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory