» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல் அமைச்சர் கனவை விஜய் தியாகம் செய்ய வேண்டும்: தமிழருவி மணியன்

சனி 20, டிசம்பர் 2025 8:57:07 PM (IST)

தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி விஜய், முதல் அமைச்சர் கனவை தியாகம் செய்துவிட்டு தமாகா அணிக்கு வர வேண்டும்" என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டில் காந்திய மக்கள் இயக்கம் என்பதை தொடங்கினார் தமிழருவி மணியன். பின்னர் அதை 2022 இல் காமராஜர் மக்கள் கட்சி என மாற்றினார். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தார் சரத்குமார். அவரை போல், தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழருவி மணியன் கூறியதாவது: ரஜினியிடம் பேசியதில் ஒரு கோப்பை மிளகு ரசமே கிடைத்தது. 3 ஆண்டுகளாக ரஜினியுடன் மாற்று அரசியல் பேசியதில் 3 கோப்பை மிளகு ரசமே கிடைத்தது. கணிசமாக வாக்கு உள்ள விஜய் சிந்திக்க வேண்டும். வெறும் 20 சதவீத வாக்குகளை வைத்து முதல்அமைச்சராக முடியாது. 

பாஜக, அதிமுகவின் 41 சதவீத வாக்குகளுடன் விஜய்யும் இணைந்தால் தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறலாம். நமது ஒரே நோக்கம் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி விஜய், முதல் அமைச்சர் கனவை தியாகம் செய்துவிட்டு தமாகா அணிக்கு வர வேண்டும்" என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory