» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் காரை மறித்து தூத்துக்குடி தவெக பெண் நிர்வாகி போராட்டம்: பனையூரில் பரபரப்பு!

செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:16:59 PM (IST)

சென்னை பனையூரில் கட்சி அலுவலகத்துக்கு வருகைதந்த விஜய்யின் காரை மறித்து தூத்துக்குடி நிர்வாகி அஜிதா மற்றும் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்களின் பெயர்கள் பல்வேறு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் செயலாளர் பதவி அறிவிக்கப்படவுள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல் என்ற பெண் நிர்வாகி, தனது பெயர் மாவட்டச் செயலாளர் பட்டியலில் இல்லாததை அறிந்து அதிர்ச்சியில் இருந்துள்ளார்.

சென்னை அடுத்த பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தின் வாயிலில் இன்று காலைமுதல் தனது ஆதரவாளர்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் அஜிதா ஈடுபட்டிருந்தார். இன்று பகல் 1 மணியளவில் தவெக அலுவலகத்துக்கு வருகைதந்த கட்சியின் தலைவர் விஜய்யின் காரை மறித்து அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆனால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் போராட்டக்காரர்களை விலக்கிய நிலையில், விஜய் காரை நிறுத்தாமல் அலுவலகத்துக்குள் சென்றுவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அஜிதா மற்றும் ஆதரவாளர்கள் அலுவலகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory