» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!

செவ்வாய் 23, டிசம்பர் 2025 4:25:54 PM (IST)



சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று(டிச. 23) சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பானது சுமார் 10 நிமிடங்கள் வரை நடைபெற்றதாகக் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்ததற்கு எதிராக ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். 

பாஜக அரசின் புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் நாளை(டிச. 24) நாடு முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளது. இந்நிலையில்தான் தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள், அரசியல் நிலவரங்கள் குறித்து முதல்வருடன் ப.சிதம்பரம் பேசியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory