» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாலிபர் படுகொலை: தேசிய பட்டியல் சமூக ஆணைய இயக்குநர் நேரில் விசாரணை!

செவ்வாய் 23, டிசம்பர் 2025 8:39:41 PM (IST)



சாத்தான்குளத்தில் பட்டியல் சமூக தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தேசிய பட்டியல் சமூக ஆணையத்தின் சென்னை மண்டல இயக்குநர் டாக்டர் எஸ். ரவிவர்மன் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், காந்திநகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலைமுத்து (27 ). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர் மற்றொரு சமூகத்தை சேர்ந்த சுந்தர், ஜெகதீஷ் மதுபான கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் கடந்த டிச.19ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேர்களை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், தேசிய பட்டியல் சமூக ஆணையத்தின் (NCSC) சென்னை மண்டல இயக்குநர் டாக்டர் எஸ். ரவிவர்மன், செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். கொலை நடந்த இடத்தை பார்வையிட்ட அவர், தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். 

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து, ஏற்கனவே வழங்கப்பட்ட பண நிவாரணத்தைத் தவிர, மாதாந்திர ஓய்வூதியம், வீடு வழங்குதல், அரசு வேலைவாய்ப்பு மற்றும் குடும்பத்திற்குப் பாதுகாப்பு போன்ற அனைத்து மறுவாழ்வு நடவடிக்கைகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். மீதமுள்ள குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.இந்த கள விசாரணையின்போது ஆராய்ச்சி அதிகாரிகள் எஸ். லிஸ்டர், என். சுரேஷ் ஆகியோர் அவருடன் சென்றனர்

பின்னர் அதே பகுதியில் இருந்த ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியை பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார் அப்போது அவருடன் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பெனிட்டா ஆசீர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,திபு, திருச்செந்தூர் கோட்டாட்சியர் கௌதம், சாத்தான்குளம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் கணேஷ்குமார், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சுவாமிநாதன், வருவாய் ஆய்வாளர் அகஸ்டின், கிராம நிர்வாக அலுவலர் மதுமிதா, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory