» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கிறிஸ்துமஸ் விழா: விஜய் வசந்த் எம்பி வாழ்த்து!

புதன் 24, டிசம்பர் 2025 11:49:03 AM (IST)

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு விஜய் வசந்த் எம்பி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அன்பு, சமாதானம், தியாகம் மற்றும் மனித நேயம் ஆகிய உயரிய மதிப்புகளை உலகிற்கு போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான இந்த இனிய கிறிஸ்துமஸ் திருநாளை  உங்கள் அனைவருடனும்  கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த திருநாள், அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி, ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதையை வலுப்படுத்தும் காலமாக அமைய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் எப்போதும் மத நல்லிணக்கம், பண்பாட்டு ஒற்றுமை மற்றும் மனிதநேயத்திற்கான முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது என்பதில் நமக்கு பெருமை.

இந்த கிறிஸ்துமஸ், உங்கள் குடும்பங்களில் ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளமை நிறைந்த நாட்களை கொண்டு வர வாழ்த்துகிறேன். கிறிஸ்து ஏசு நம் அனைவர் மனதிலும் பிறக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory