» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜனநாயகன் படம் வெற்றிகரமாக வெளிவரும்: ஜீவா பேட்டி

ஞாயிறு 18, ஜனவரி 2026 9:03:49 AM (IST)



சென்சார் பிரச்சினைகளை முடித்துக்கொண்டு ஜனநாயகன் படம் வெற்றிகரமாக வெளிவரும் என்றும் நடிகர் ஜீவா கூறினார்.

நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குனர் நித்திஷ் சகாதேவ் இயக்கத்தில் "தலைவர் தம்பி தலைமையில்" என்ற திரைப்படம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் உள்ள கிளியோபட்ரா தியேட்டரில் ஓடிய இந்த படத்தை காண்பதற்காக நடிகர் ஜீவா மற்றும் இயக்குனர் நித்திஷ் சகாதேவ் ஆகியோர் வந்தனர்.

திரையரங்கு நிர்வாகம் சார்பில் நடிகர் ஜீவா மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரசிகர்களிடம் படம் குறித்த கருத்துகளை கேட்டனர். பின்னர் நடிகர் ஜீவா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் ஜனவரி 30-ஆம் தேதி தான் ரிலீஸ் ஆவதாக இருந்தது.

ஆனால் தற்போது அண்ணனின் (நடிகர் விஜய்) ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாத நிலையில் தம்பி படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த திரைப்படத்தை மலையாள பட இயக்குனர் நித்திஷ் சகாதேவ் இயக்கி உள்ளார். தற்போது சென்சார் போர்டு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கின்றது. எனக்கு ஜிப்ஸி படம் வரும்போது 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கட் செய்யப்பட்டது.

பல்வேறு வசனங்கள் பிளாக் அண்ட் ஒயிட் காட்சிகளாக வைக்கப்பட்டன. இந்த படத்திற்கும் சிறிய பிரச்சினை வந்தது. பின்னர் சரியாகிவிட்டது. ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் போர்டு பிரச்சினை முடிந்து வெற்றிகரமாக வெளி வரும். ஜனநாயகன் திரைப்படம் நடிகர் விஜய்யின் கடைசி படமாக இருக்கக் கூடாது என்பது எனது விருப்பம்.

நடிகர் விஜய்யின் படங்கள் அனைத்துமே வசூலை குவிக்கும். தியேட்டர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு வெற்றியை கொடுக்கும். அதே போன்று இந்த ஜனநாயகன் திரைப்படமும் வெற்றி பெறும் என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory