» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவண்ணாமலையில் மாசி மாத பவுர்ணமி கிரிவலம்: சந்திர கிரகணத்திலும் நடை திறப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:28:33 AM (IST)
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் இன்று (திங்கட்கிழமை) மாலை 6:29 மணிக்குத் தொடங்கி, நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5:52 மணிக்கு நிறைவடைகிறது. மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நாளை திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது.சந்திர கிரகணமும் கோயில் நடை திறப்பும்
இதற்கிடையில், நாளை மாலை 3:20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி இரவு 7:53 மணிக்கு முடிவடைகிறது. பொதுவாகச் சந்திர கிரகணம் நிகழும் நாட்களில் பெரும்பாலான கோவில்களில் நடை அடைக்கப்படுவது வழக்கம். ஆனால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சந்திர கிரகணத்தின் போது நடை அடைக்கப்படாது. பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சந்திர கிரகணம் முடியும் போதும், சூரிய கிரகணம் தொடங்கும் போதும் அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெறுவது மரபாகும். அந்த வகையில், நாளை மாலை கிரகணம் நிறைவடையும் வேளையில், கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளதாகக் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது : தூத்துக்குடியில் செல்வப்பெருந்தகை பேட்டி
வெள்ளி 6, மார்ச் 2026 4:12:44 PM (IST)

ஆல் பினிஷ்: சட்டம்- ஒழுங்கு கைமீறி போய் விட்டதா? முதல்வருக்கு ராமதாஸ் கேள்வி!
வெள்ளி 6, மார்ச் 2026 3:49:03 PM (IST)

மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 12:48:47 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

