» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு

வெள்ளி 6, மார்ச் 2026 12:48:47 PM (IST)

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. பதவியிடங்கள் ஏப்ரல் 2-ந்தேதி காலியாகின்றன. இந்த பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 26-ந்தேதி தொடங்கியது.

தி.மு.க. சார்பில் திருச்சி சிவா எம்.பி., கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தே.மு.தி.க. சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை எம்.பி. போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் மற்றொரு இடம் கூட்டணி கட்சியான பா.ம.க.வுக்கு ஒதுக் கீடு செய்யப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் என்பதால் தி.மு.க.. அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

முதல்-அமைச்சர் முன்னிலையில் தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தே.மு.தி.க. சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனுவை தனித்தனியாக தாக்கல் செய்தனர்.

முன்னதாக, அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிக்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, கே.பி.அன் பழகன் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி மற்றும் பா.ம.க. எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனுவை அளித்தார். அன்புமணி ராமதாசுக்கு, மாற்று வேட்பாளராக அவரது மனைவி சவுமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் உதயகுமார், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. எம்.எல்.ஏ.க் கள் சதாசிவம், சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தேர்தல் நடத்தும் அதிகாரியும், தமிழக சட்டசபை கூடுதல் செயலாளரு மான சாந்தி வேட்பு மனுவை பெற்றுக்கொண்டார். வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் உறுதிமொழி படிவத்தை வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிவடைவதற்கு 1 நிமிடத்திற்கு முன்பு பா.ம.க. நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாசின் உதவியாளர் சாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று (6-ந்தேதி) வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த 6 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, இவர்கள், அனைவரும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். 9-ந்தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஆகும்.

இதனிடையே பத்மராஜன், கே.பி.எம்.ராஜா, மேஷாக் கிருபாகரன், அக்னி ஆழ்வார், கந்தசாமி, சாமிநாதன் ஆகியோர் சுயேச்சையாக தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

பொதுவாக கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிந்து கையெழுத்திட்டு இருக்க வேண்டும். அந்தவகையில், தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள 6 பேரின் வேட்பு மனுக்களை தவிர்த்து இதர மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory