» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)
அந்தியோதயா ரயில்கள் முற்றிலும் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகள் கொண்டதாகும். இந்த ரயில்கள் அதிக பயணிகள் நெருக்கடி கொண்ட பாதைகளில் இயக்கப்படுகிறது.
இதன்படி நாகர்கோவில் - சென்னை மார்க்கம் அதிக போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பகுதியாக இருப்பதால் இந்த வழித்தடத்தில் தாம்பரம் - திருநெல்வேலி மார்க்கத்தில் 2018-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வந்தது பின்னர் இந்த ரயில் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு; மத்திய இணை அமைச்சர் பொன்னார் முயற்சியால் இந்த ரயில் 2019 -ம் ஆண்டு தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு மார்ச் மாதம் 5ஆம் தேதி நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பெயரின் பொருள்: "அந்தியோதயா" என்ற இந்தி சொல் தமிழில் "ஏழைகளின் எழுச்சி" அல்லது "கடைநிலையானவர்களின் உயர்வு" என்று பொருள்படும். அந்தோதையா வகை ரயில்களில் எல்.இ.டி திரையில் தொடருந்து நிலையங்கள், விரைவு வண்டியின் வேகம் போன்ற காட்சிப்படுத்தப்படும். மேலும் தேநீர், புகைபிடிப்பான், சிசிடிவி கேமராக்கள் காபி மற்றும் பால் வழங்கும் இயந்திரங்களும், உயிரி கழிப்பறைகள் மற்றும் கழிப்பறை உபயோகம் குறிகாட்டிகள் இருக்கிறது.
அத்துடன் சிசிடிவி கேமராக்கள், பருகக் குடிநீர் மற்றும் கைபேசி சார்ஜ் புள்ளிகள் அமையவிருக்கிறது. நாகர்கோவில் - சென்னை(தாம்பரம்) அந்தியோதயா ரயில் 22 பெட்டிகளும் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட ரயில்கள் ஆகும். இந்த காரணத்தால் அந்தியோதயா விரைவு ரயில்கள் சாதாரண எக்ஸ்பிரஸ் ரெயில்களின் கட்டணத்தை விட சற்று அதிகமாக 10-15 சதமானம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்திய அளவில் பத்து அந்தியோதயா ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில்களில் நாகர்கோவில் - தாம்பரம் ரயில் மட்டும் தினசரி அந்தோதையா ரயில் சேவை ஆகும். மற்ற அனைத்து ரயில்களும் வாரம் ஒருமுறை, இருமுறை என இயங்கும் ரயில்கள் ஆகும். இந்த நாகர்கோவில் - தாம்பரம் ரயிலுக்கு அகில இந்திய அளவில் சிறப்பு ஆகும். தற்போது தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட வழித்தடங்களில் கொச்சுவேலி - மங்களுர் வாரம் மூன்று முறை, எர்ணாகுளம் - ஹவுரா, சென்னை சந்திரகாசி ஆகிய இடங்களில் வாராந்திர இந்த அந்தியோதயா ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி, அனந்தபுரி நெல்லை போன்ற மற்ற சூப்பர் பாஸ்ட் ரயில்கள் முன்பதிவில்லாத பெட்டிகள் இரண்டு முதல் நான்கு பெட்டிகள் மட்டுமே இருக்கும். இந்த பெட்டிகளில் அனைவருக்கும் இருக்கைகள் கிடைக்காமல் சென்னை வரை நின்று கொண்டு செல்லும் பயணிகள் உண்டு. இந்த அந்தியோதயா ரயில்களில் அதிக அளவில் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்டு இரவு நேரத்தில் ரயில்கள் இயக்குவதால் ஏழை பயணிகள் குறைந்த கட்டணத்தில் சென்னைக்கு மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியும்.
தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மைலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலுக்கு இயக்கப்படுகிறது. குமரி மாவட்ட பயணிகள் டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு (சிதம்பரம், மைலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர்) செல்ல தினசரி ரயிலாக இந்த ஒரு ரயில் உள்ளது. தற்போது இந்த பகுதிகளுக்கு செல்ல எந்த ஒரு தினசரி இரவு நேர படுக்கை வசதி கொண்ட ரயில் சேவையும் கிடையாது. ஆகவே இந்த ரயிலில் குமரி மாவட்ட பயணிகள் அதிக அளவில் பயணம் செய்கின்றனர்.
அந்தியோதயா ரயில்கள் வண்ணத்தில் உள்ள புதிய பெட்டிகள் தயாரிப்பு ரயில்வேதுறை நிறுத்தி விட்டது. இதனால் தற்போது நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயில் சாதாரண எல்எச்பி பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகின்றது. இந்த காரணத்தால் நாகர்கோவிலுக்கும் தாம்பரத்துக்கும் இடையில் உள்ள ரயில் நிலையங்களில் இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் சாதாரண சூப்பர் பாஸ்ட் பயண சீட்டை எடுத்து விட்டு ரயில் பெட்டிகள் வண்ணம் ஒரே மாதிரியாக இருக்கின்ற காரணத்தால் இந்த அந்தியோதயா ரயிலில் பயணம் செய்து பயணச்சீட்டு பரிசோதகரிடம் அபராதம் கட்டும் நிலைக்கு தள்ள படுகிறார்கள்.
ஆனால் இந்த ரயிலில் இந்த ரயிலுக்கு உரிய வசதிகள் ஒன்றுமே தற்போது இல்லை, அனைத்தையும் ரயில்வே நிறுத்தி விட்டது என்று கூறலாம், ஆனால் கட்டணம் மட்டும் அந்தியோதயா ரயிலுக்கான மற்ற ரயில்களை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
ஆகவே அந்தியோதயா ரயிலுக்கான வசதிகள் ஏதும் இல்லாத காரணத்தால் இந்த ரயிலுக்கான கட்டணம் குறைந்து சாதாரண சூப்பர் பாஸ்ட் கட்டணத்துடன் இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் சங்கம் தலைவர் ஸ்ரீராம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ரயில்வே வாரியத்துக்கு கோரிக்கையும் அனுப்பியுள்ளார்.
குமரி புறக்கணிப்பு: அந்த்தோதயா ரயில் முதலில் அறிவிக்கும் போது நாகர்கோவிலிருந்து அறிவிக்காமல் மதுரை கோட்டத்தின் கடைசி எல்லையான திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டது. இதுபோல்தான் திருச்சி இன்டர்சிட்டி ரயில் முதலில் ரயில் அறிவிக்கும் போது திருநெல்வேலிக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குமரி மாவட்டத்துக்கு இயக்கப்படாததால் குமரி மாவட்ட ரயில்வே பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் அமைந்துள்ள காரணத்தால் தான் இயக்கப்படவில்லை என்ற ஒரு கருத்தும் குமரி பயணிகள் மத்தியில் உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது : தூத்துக்குடியில் செல்வப்பெருந்தகை பேட்டி
வெள்ளி 6, மார்ச் 2026 4:12:44 PM (IST)

ஆல் பினிஷ்: சட்டம்- ஒழுங்கு கைமீறி போய் விட்டதா? முதல்வருக்கு ராமதாஸ் கேள்வி!
வெள்ளி 6, மார்ச் 2026 3:49:03 PM (IST)

மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 12:48:47 PM (IST)

ஆளுநா் ஆா்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றம்: கேரள ஆளுநருக்கு தமிழக கூடுதல் பொறுப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 12:24:08 PM (IST)

