» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகள்: வ.உ.சி துறைமுகம் வரலாற்றுச் சாதனை!

திங்கள் 9, மார்ச் 2026 4:31:25 PM (IST)



தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சரக்குகளைக் கையாளுவதில் புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளது. 

இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே கப்பலில் இருந்து 147 காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களை கையாண்டு தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஒரே கப்பலில் 103 காற்றாலை இறகுகளைக் கையாண்டதே சாதனையாக இருந்தது. 

தற்போது அந்தச் சாதனையை வ.உ.சி துறைமுகம் முறியடித்துள்ளது. சீனாவின் 'சின்சோ' (Qinzhou) துறைமுகத்திலிருந்து 'எம்.வி. போ ரன் ஜியூ சோ'என்ற கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட, தலா 76 மீட்டர் நீளமுள்ள இந்த 147 இறகுகளும் மார்ச் 8-ம் தேதி வெற்றிகரமாக இறக்கி முடிக்கப்பட்டன.75% அதிரடி வளர்ச்சிஇந்த நிதியாண்டில் பிப்ரவரி 2026 வரை வ.உ.சி துறைமுகம் மொத்தம் 4,211 காற்றாலை இறகுகளைக் கையாண்டுள்ளது. 

இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் (2,395 இறகுகள்) ஒப்பிடுகையில் 75.82% வளர்ச்சியாகும்.காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் இந்தியாவின் முன்னணி துறைமுகமாகத் திகழும் வ.உ.சி துறைமுகம், தனது உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி வருகிறது. துறைமுகத்தின் உட்பகுதியில் 60,000 சதுர மீட்டர் கூடுதல் சேமிப்பு இடம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் மேலும் 1,80,000 சதுர மீட்டர் பரப்பளவு சேமிப்பு வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தச் சாதனையை சாத்தியமாக்கிய இறக்குமதியாளர்கள் மற்றும் முகவர்களுக்கு வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் தலைவர்சுசாந்த குமார் புரோஹித் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 'Maritime Amrit Kaal Vision 2047' திட்டத்தின்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த கடல்சார் துறையை உருவாக்க இத்துறைமுகம் உறுதியுடன் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory