» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக அரசைக் கண்டித்து மார்ச் 12-ல் ஆர்ப்பாட்டம் : தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு!
திங்கள் 9, மார்ச் 2026 4:51:47 PM (IST)
விஜய்யின் மக்கள் சந்திப்பை முடக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வழியுறுத்தி வரும் மார்ச் 12-ம் தேதி தவெக சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தனது எக்ஸ் தளத்தில், "விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோருகிறோம்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.
அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.
இவற்றை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வரும் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகளும் தோழர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி இசைத் விழா: 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!
திங்கள் 9, மார்ச் 2026 9:37:29 PM (IST)

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: சிறந்த நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஊக்கப்பரிசு
திங்கள் 9, மார்ச் 2026 8:43:18 PM (IST)

தமிழக அரசு அச்சுத்துறையில் வேலை: 10-ம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
திங்கள் 9, மார்ச் 2026 5:49:45 PM (IST)

அம்ரித் பாரத் ரயில்: கன்னியாகுமரி மாவட்டம் புறக்கணிப்பு? பயணிகள் அதிருப்தி!
திங்கள் 9, மார்ச் 2026 5:44:32 PM (IST)

மாநிலங்களவைத் தேர்தல்: தம்பிதுரை, திருச்சி சிவா உள்ளிட்ட 6 பேர் போட்டியின்றித் தேர்வு!
திங்கள் 9, மார்ச் 2026 4:56:43 PM (IST)

ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகள்: வ.உ.சி துறைமுகம் வரலாற்றுச் சாதனை!
திங்கள் 9, மார்ச் 2026 4:31:25 PM (IST)

