» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா குளிர்சாதனப் பெட்டி: இபிஎஸ் வாக்குறுதி!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:29:01 PM (IST)
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 24) வெளியிட்டார். ஏற்கெனவே 3 கட்டங்களாக 16 வாக்குறுதிகளை அறிவித்திருந்த நிலையில், முழுத் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 28 ஆண்டுகள் அதிமுகவை கட்டிக்காத்தவர் ஜெயலலிதா. 7.5% இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உள்ளிட்டவை அதிமுக கொண்டுவந்தவை. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றி ஆட்சி செய்துவந்த திமுகவை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்.
அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்
குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்.
ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி.
மகளிக்கு மாதம் ரூ. 2000 ஊக்கத் தொகை
5 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைவரும் ஜனநாயகத்தின் தூதுவர்களாக சென்று பணியாற்ற வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:44:11 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அமமுகவுக்கு 2 தொகுதிகள்? உத்தேச பட்டியல் வெளியானது!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:37:09 PM (IST)

பிரதமர் ஆற்றிய உரை உண்மைக்கு மாறானது: இந்தியக் கம்யூனிஸ்ட் கடும் குற்றச்சாட்டு!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:40:54 PM (IST)

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:35:32 PM (IST)

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரச்சாரம்: பயண அட்டவணை வெளியீடு!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:21:25 PM (IST)

வாக்களிக்கும் வைபவம்: திருமண அழைப்பிதழ் பாணியில் தூத்துக்குடியில் தேர்தல் விழிப்புணர்வு!
செவ்வாய் 24, மார்ச் 2026 3:46:32 PM (IST)

