» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மகளிர் அணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை : தவெக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு!
செவ்வாய் 31, மார்ச் 2026 10:34:20 AM (IST)
தவெக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்கட்சியின் பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தவெகவின் வேட்பாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டனர். பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினராக குட்டி என்கிற பிரகாசம் அறிவிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில், தவெக வேட்பாளர் குட்டி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக மகளிர் அணியைச் சேர்ந்த பெண், கட்சித் தலைமையில் புகார் கொடுத்து 6 மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்காத நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக வெளியே யாரிடமாவது கூறினால் கூலிப்படை மூலம் குடும்பத்தையே கொன்று விடுவேன் என்று குட்டி மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தவெக வேட்பாளர் குட்டி மீது பாலியல் தொல்லை உள்பட 6 பிரிவுகளின் கீழ் திருவள்ளூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, பதவி கொடுக்காததால் தனது கணவர் மீது பொய் குற்றச்சாட்டு அளிக்கப்பட்டுள்ளதாக குட்டியின் மனைவி நேற்று திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை: தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:49:36 AM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம்: மக்களே முடிவு செய்யும் சுதந்திரம் - கனிமொழி விளக்கம்
செவ்வாய் 31, மார்ச் 2026 10:43:38 AM (IST)

தமிழ்நாட்டில் 68 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 10:17:56 AM (IST)

