» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)
திருமணத்திற்கு முன்னதாகப் பிறந்த குழந்தையை, காதலனுடன் சேர்ந்து பக்கெட்டில் அடைத்துக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலனைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொற்றையடி அடுத்த கரம்பவிளை பகுதியில் உள்ள முட்புதர் ஒன்றில், பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றிற்குள் பச்சிளம் குழந்தை ஒன்று இறந்து கிடப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீஸாரின் தீவிர விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. அந்தப் பகுதியைச் சேர்ந்த ரெஜினா (20) என்ற நர்சிங் கல்லூரி மாணவியும், திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியைச் சேர்ந்த முகேஷ் (25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலால் ரெஜினா கர்ப்பமடைந்துள்ளார். திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்ததால், சமூகப் பழிச்சொல்லுக்கு அஞ்சி இருவரும் சேர்ந்து குழந்தையைக் கொல்லத் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே அதைக் கொன்று, ஒரு பக்கெட்டில் அடைத்து ஆள் நடமாட்டமற்ற முட்புதரில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, நர்சிங் மாணவி ரெஜினா மற்றும் அவரது காதலன் முகேஷ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் தடையயங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். பிறந்த சில மணி நேரத்திலேயே பச்சிளம் குழந்தை தாயாலேயே கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை: தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:49:36 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம்: மக்களே முடிவு செய்யும் சுதந்திரம் - கனிமொழி விளக்கம்
செவ்வாய் 31, மார்ச் 2026 10:43:38 AM (IST)

மகளிர் அணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை : தவெக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு!
செவ்வாய் 31, மார்ச் 2026 10:34:20 AM (IST)

தமிழ்நாட்டில் 68 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 10:17:56 AM (IST)

