» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிடிவி தினகரன் ஏப்ரல் 6 முதல் பிரச்சாரம்: ஏப்.15-ல் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி!

புதன் 1, ஏப்ரல் 2026 5:26:46 PM (IST)

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிடிவி தினகரன் ஏப்ரல் 6 முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். ஏப்.15-ல் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026 களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூறாவளிப் பிரச்சாரப் பயணத் திட்டம் குறித்த அறிவிப்பை அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

வாக்குப்பதிவு வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை டிடிவி தினகரன் அவர்கள் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க உள்ளார்.

பிரச்சார அட்டவணை:

06.04.2026 திங்கட்கிழமை சைதாப்பேட்டை

07.04.2026 செவ்வாய்க்கிழமை பூந்தமல்லி

08.04.2026 புதன்கிழமை திருப்பத்தூர்

09.04.2026 வியாழக்கிழமை பெரியகுளம்

10.04.2026 வெள்ளிக்கிழமை காரைக்குடி

11.04.2026 சனிக்கிழமை திருச்சிராப்பள்ளி (மேற்கு)

12.04.2026 ஞாயிற்றுக்கிழமை மன்னார்குடி

13.04.2026 திங்கட்கிழமை திருவையாறு

15.04.2026 புதன்கிழமை ஓட்டப்பிடாரம்

17.04.2026 வெள்ளிக்கிழமை நாங்குநேரி

18.04.2026 சனிக்கிழமை மடத்துக்குளம்

இந்தச் சுற்றுப்பயணத்தின் போது, அந்தந்தத் தொகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் டிடிவி தினகரன் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை அமமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory