» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவனை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:09:15 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பி. கீதா ஜீவனை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. இன்று தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி கலைஞர் அரங்கம் அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் திரு. ஏ.பி.சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, திமுக வேட்பாளர் அமைச்சர் பி. கீதா ஜீவன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட கனிமொழி கருணாநிதி எம்.பி., புதிய தேர்தல் பணிமனையை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, அங்குள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள விநாயகர் கோவில் முன்பிருந்து கனிமொழி எம்.பி. தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.
திறந்த ஜீப்பில் நின்றவாறு போல் பேட்டை, ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம், முத்தம்மாள் காலனி மற்றும் ஹவுசிங் போர்டு ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடையே வேட்பாளர் கீதா ஜீவனுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட மருத்துவ அணித் தலைவர் அருண்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மீராசா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ்.எம். சகாயராஜ், சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளர் பி.எம். அற்புதராஜ், மதிமுக மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாநகரச் செயலாளர் முருகபூபதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிச் செயலாளர் விமல் உள்ளிட்ட கூட்டணியின் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மண்ணின் மைந்தன் நான்: தவெக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத் பேட்டி!
புதன் 1, ஏப்ரல் 2026 9:35:41 PM (IST)

கேஸ் சிலிண்டர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு: ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்!
புதன் 1, ஏப்ரல் 2026 5:37:24 PM (IST)

டிடிவி தினகரன் ஏப்ரல் 6 முதல் பிரச்சாரம்: ஏப்.15-ல் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி!
புதன் 1, ஏப்ரல் 2026 5:26:46 PM (IST)

4 தொகுதிகளிலும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் ம.தி.மு.க. போட்டி: வைகோ அறிவிப்பு
புதன் 1, ஏப்ரல் 2026 5:21:27 PM (IST)

சுற்றுச்சுழல் பாதிப்பில்லாத தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
புதன் 1, ஏப்ரல் 2026 4:01:03 PM (IST)

தேர்தல் விதிமீறல் குறித்து 24மணி நேரமும் புகார் அளிக்கலாம் : ஆட்சியர் தகவல்
புதன் 1, ஏப்ரல் 2026 3:43:13 PM (IST)

