» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இருசக்கர வாகனங்கள் மோதல்: பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு - வாலிபர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:47:28 AM (IST)
வில்லுக்குறி அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபம், மாறாங்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன். இவர் தற்போது பனவிளை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கடைசி மகள் அர்ச்சனா (16). இவர் தக்கலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு (பிளஸ்-1) படித்து வந்தார்.
கடந்த 30-ஆம் தேதி இரவு, அர்ச்சனா தனது இருசக்கர வாகனத்தில் நாகர்கோவிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். வில்லுக்குறி அருகே வெள்ளச்சிவிளை என்ற பகுதியைச் சென்றடைந்தபோது, எதிரே அதிவேகமாக மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராத விதமாகக் கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் அர்ச்சனா தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப்போராடிய அவரை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டுச் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அர்ச்சனா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், விபத்தை ஏற்படுத்தியதாக வில்லுக்குறி மேலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ரெதீஷ் (21) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாகத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அர்ச்சனாவின் குடும்பத்தினரிடையேயும், அப்பகுதி மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தன்னையும் மக்களையும் நம்பாதவரே இரு தொகுதிகளில் போட்டி: விஜய் மீது சீமான் விமர்சனம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:00:26 AM (IST)

அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி தொகுதி வளர்ச்சி : வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் பிரச்சாரம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 10:20:49 AM (IST)

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களை ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
வியாழன் 2, ஏப்ரல் 2026 10:12:28 AM (IST)

தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:27:58 AM (IST)

இரு குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை: ஆயுள் தண்டனை கைதிக்கு சாகும் வரை சிறை...!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:18:30 AM (IST)

தூத்துக்குடி மண்ணின் மைந்தன் நான்: தவெக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத் பேட்டி!
புதன் 1, ஏப்ரல் 2026 9:35:41 PM (IST)

