» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா : மேரி பிரின்சி லதா பொறுப்பு மேயராக நியமனம்

திங்கள் 6, ஏப்ரல் 2026 4:33:05 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருந்த மகேஷ், வரும் சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து துணை மேயர் மேரி பிரின்சி லதா இன்று பொறுப்பு மேயராக நியமனம் செய்யப்பட்டார். 

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக மகேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். தேர்தல் விதிகளின்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அதன்படி, அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.

மேயர் பதவி காலியானதைத் தொடர்ந்து, மாநகராட்சி சட்ட விதிமுறைகளின்படி துணை மேயராகப் பணியாற்றி வந்த மேரி பிரின்சி லதா, இன்று முதல் மாநகராட்சியின் பொறுப்பு மேயராகப் பணிகளைத் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் அவர் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory