» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டப்பேரவைத் தலைவராக ஜே.சி.டி. பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் தேர்வு!

செவ்வாய் 12, மே 2026 10:26:42 AM (IST)



சட்டப்பேரவைத் தலைவராக ஜே.சி.டி. பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுதற்காக தவெக சார்பில், ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல, பேரவைத் துணைத் தலைவர் பதவிக்கு துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏ எம். ரவிசங்கர் மனு தாக்கல் செய்தார்.

பேரவைத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலுக்கு தவெக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள ஜே.சி.டி. பிரபாகர், எம்.ரவிசங்கர் ஆகியோருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவராக ஜே.சி.டி. பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் இருவரும் போட்டியின்றி இன்று(மே 12) தேர்வு செய்யப்பட்டனர்.

மரபுப்படி அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் ஜே.சி.டி. பிரபாகரை அழைத்துச் சென்று சட்டப்பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்தனர்.

”உங்கள் அரசு தொடர எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் வாழ்த்தினார்.

”ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் அவையாக நீங்கள் இந்த அவையை வழிநடத்த வேண்டும்” என்று காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி நியாயங்களை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர் வன்னிஅரசு கூறினார். சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி. பிரபாகருக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேரவை உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory