» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஈப்பு வாகனம் பொது ஏலம்!

செவ்வாய் 12, மே 2026 10:53:43 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் பயன்பாட்டிலுள்ள முதிர்ந்த நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஈப்பு எண் TN 74 AG 7000 என்ற வாகனத்தை 27.05.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து கீழ்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு பொது ஏலம் விடப்பட உள்ளது.

நிபந்தனைகள்:

1. பொது ஏலத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பாதாயிரம் மட்டும்) வீதம் முன் வைப்புத்தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

2. GST எண் உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

3. அரசு தானியங்கி பொறியாளரின் மதிப்பீட்டுத்தொகைக்கு குறையாமல் (ரூ.1,40,000/-) ஏலம் கோரப்பட வேண்டும்.

4. கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்டவருக்கு நிபந்தனைகளுக்குட்பட்டு ஏலம் உறுதி செய்யப்படும்.

5. ஏலம் உறுதி செய்யப்பட்டவுடன் முழுத்தொகை மற்றும் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியினையும் சேர்த்து ரொக்கமாக உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கஜானாவில் உரிய கணக்குத் தலைப்பில் தொகையினை செலுத்த வேண்டும்.

6. வாகனத்தை அலுவலக நேரத்தில் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நேரில் பார்வையிடலாம்.

7. ஏலத்தை ரத்து செய்யவோ அல்லது தள்ளி வைக்கவோ  மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

8. இதர நிபந்தனைகளுக்குட்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory