» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் அருகே நகைக்கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது: மேலும் மூவருக்கு போலீஸ் வலைவீச்சு

சனி 16, மே 2026 9:02:22 PM (IST)

நாகர்கோவில் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து, 30 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலைச் சேர்ந்த 2 பேரைச் சுசீந்திரம் போலீசார் கைது செய்துள்ளனர். 

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி பெருங்குளம் சுடலை ஆண்டவர் கோவில் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் அன்பையா (42). இவர் என்.ஜி.ஓ. காலனி காமராஜர் சாலையில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த மே 13-ஆம் தேதி இரவு 9 மணிக்கு அன்பையா வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று, நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளது. கடையில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 1 கிலோ ஐம்பொன் ஆகியவற்றைத் துணிகரமாகக் கொள்ளையடித்துக் கொண்டு அக்கும்பல் தப்பியோடியது.

மறுநாள் காலையில் கடை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த அன்பையா உடனடியாகச் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களைப் பிடிக்க உடனடியாக 2 தனிப்படைகளை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

தனிப்படை போலீசார் நகைக்கடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை முழுமையாகக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்களின் உருவம் மற்றும் அடையாளங்கள் மிகத் தெளிவாகப் பதிவாகியிருந்தது. 

இந்தக் காட்சிப் பதிவுகளின் அடிப்படையில் துப்புலக்கிய தனிப்படையினர், கொள்ளைச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட வடிவீஸ்வரம் மாயகிருஷ்ணன் (வயது 38), ஒழுகினசேரி அருகில் பறக்கிங்கால் அய்யப்பன் (36) ஆகிய இருவரைக் கைது செய்தனர்:

கைது செய்யப்பட்ட இருவரிடமும் சுசீந்திரம் தனிப்படை போலீசார் தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு நேரடித் தொடர்பு இருப்பதும், அவர்கள் கொள்ளையடித்த நகைகளுடன் தலைமறைவாக இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்கள் 3 பேரின் இருப்பிடங்களையும் போலீசார் நெருங்கிவிட்டதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் எஞ்சிய கொள்ளையர்களும் முழுமையாகக் கைது செய்யப்பட்டு, கொள்ளைபோன நகைகள் மீட்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory